அரசு நீட் பயிற்சி மையத்தில் படித்த ஒருவருக்கு கூட மருத்துவ சீட் கிடைக்கவில்லையா? செங்கோட்டையன் விளக்கம்

”தமிழகத்தை பொறுத்தவரை இருமொழிக்கொள்கை தான் என்ற முடிவை முதலமைச்சர் எஅவர்கள் பிரதமருக்கு கடிதம் மூலமாக தெரிவித்துள்ளார்”

அரசு நீட் பயிற்சி மையத்தில் படித்த ஒருவருக்கு கூட மருத்துவ சீட் கிடைக்கவில்லையா? செங்கோட்டையன் விளக்கம்
அமைச்சர் செங்கோட்டையன்
  • News18
  • Last Updated: July 22, 2019, 11:29 AM IST
  • Share this:
அரசு நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களில் ஒருவருக்கு கூட மருத்துவ இடம் கிடைக்கவில்லை என்ற செய்தி தவறானது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.

இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன, மீன்வளம் மற்றும் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் அரசு நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களில் ஒருவர் கூட மருத்துவம் படிக்க தேர்வாகவில்லை என்ற செய்தி தவறு. 2 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வேண்டுமென்றால் மாணவர்களின் பட்டியலை தருகிறேன் சரிபார்த்துகொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுவரை 54,32,000 மடிக்கணினிகள் இந்த ஆண்டு வழங்கி இருக்கிறோம். மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கும் மடிக்கணினிகள் இந்த ஆண்டு முழுமையாக வழங்கப்படும். அதற்காக 15 இலட்சம் மடிக்கணினிகள் வழங்க தயாராக இருக்கிறது. இந்தியாவே வியக்கத்தக்க அளவிற்கு புதிய பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கையில் அரசுக்கு ஒரே நிலைப்பாடு தான். தமிழகத்தை பொறுத்தவரை இருமொழிக்கொள்கை தான் என்ற முடிவை முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் பிரதமருக்கு கடிதம் மூலமாக தெரிவித்துள்ளார் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்தார்.Also see...

First published: July 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading