இந்தி புத்தகத்துடன் செல்பி எடுத்து அனுப்பினால் பரிசு...! பணியாளர்களுக்கு நிர்வாகம் அறிவிப்பு

ஹிந்தி புத்தகங்களுடன் செல்பி எடுத்து அனுப்பினால் பரிசு வழங்கப்படும் என மதுரை ரயில்வே நிர்வாகம் அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்?

இந்தி புத்தகத்துடன் செல்பி எடுத்து அனுப்பினால் பரிசு...! பணியாளர்களுக்கு நிர்வாகம் அறிவிப்பு
News18
  • News18
  • Last Updated: December 28, 2019, 3:37 PM IST
  • Share this:
தமிழகத்தில் ரயில்வே நிர்வாகம் இந்தி தொடர்பான விவகாரங்களில் அவ்வப்போது சிக்குவது வழக்கமாகிவிட்டது. அதன் தொடர்ச்சியாக ரயில்வே பணியாளர்கள் இந்தி புத்தகங்களுடன் செல்ஃபி எடுத்து அனுப்பினால் பரிசு வழங்கப்படும் என்ற அறிவிப்பு புதிய சர்ச்சையை எழுப்பியுள்ளது.

'புத்தகத்துடன் ஒரு செல்ஃபி' என்ற தலைப்பில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய முறையானது படிக்கும் பழக்கத்தை அதிகரிப்பதற்காகதொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பழக்கமானது இந்தி புத்தகங்களுக்கு மட்டுமே எனக் குறிப்பிடப்பட்டிருப்பது தான் இந்த சர்ச்சைக்கு காரணம்.

மதுரை கோட்டத்தில் நெல்லை உள்ளிட்ட இடங்களில் 10 இந்தி நூலகங்கள் உள்ளன.  அவை இந்தி நூலகங்கள் என்பதால் பெரும்பாலோனோர் அங்கு செல்வதில்லை. ரயில்வே பணியாளர்களை அங்கு வரவழைக்கும் பொருட்டு  “புத்தகத்துடன் ஒரு செல்ஃபி” என்ற புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளனர்.


இந்த திட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் மதுரை கோட்டத்திற்குட்பட்ட ஏதாவது ஒரு நூலகத்துக்குச் சென்று இந்தி புத்தகத்துடன் செல்பி எடுத்து மதுரை ரயில்வே கோட்ட இந்தி அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். எந்த தொழிலாளி அதிகமாக “புத்தகத்துடன் செல்ஃபி” எடுத்து அனுப்புகிறார்களோ அவர்களுக்கு மதுரை கோட்ட ரயில்வே மேலாளர்  லெனின், மார்ச் மாத இறுதியில்  பரிசுகள் வழங்குவார் என்றும்,  கலந்து கொள்பவர்கள் ஒரு நாளுக்கு ஒரு செல்ஃபி தான் அனுப்ப வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று நெல்லை ரயில் நிலையத்தில் தொடங்கப்பட்ட இந்த திட்டமானது மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து இந்தி நூலகங்களிலும் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. சர்ச்சைக்குரிய இந்த திட்டம் குறித்து மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் லெனினிடம் கேட்டபோது, ''இது வழக்கமான நடைமுறைதான்,' என்று பதில் கூறினார்.
First published: December 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்