TN Budget 2021 : ‘செம்மொழி தமிழ்’ விருது... ஜூன் 3ஆம் நாள் 10 லட்சம் ரூபாயுடன் வழங்கப்படும் - நிதியமைச்சர்

பட்ஜெட் உரை

கருணாநிதி பிறந்தநாளில் செம்மொழி தமிழ் விருது வழங்கப்படும்.

  • Share this:
    செம்மொழி தமிழ் விருது இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3ஆம் தேதி (கருணாநிதி பிறந்தநாளில்) 10 லட்சம் ரூபாயுடன் வழங்கப்படும் என பட்ஜெட் உரையில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

    மேலும், தமிழ் வளர்ச்சித் துறைக்கு 80.26 கோடி ரூபாயும், தொல்லியல் துறைக்கு 29.43 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    கீழடி, கொடுமணல் உள்ளிட்ட இடங்கள் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும். 5 கோடி ரூபாய் நிதி தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள ஒதுக்கப்படும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய நிதியமைச்சர், தேசிய கடல்சார் நிறுவனம் தேசிய கடல் தொழில் நுட்பவியல் நிறுவனம் மற்றும் இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து முதற்கட்டமாக சங்ககால துறைமுகங்கள் அமைந்திருந்தன. கொற்க்கை மற்றும் அழகன்குளம் பகுதியில் ஆழ்கடல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

    Must Read : பட்ஜெட் குறித்த உடனுக்குடன் அப்டேட்டுக்கு இங்கே கிளிக் செய்க

    நில நிர்வாக ஆணையர் அவரின் தலைமையின் கீழ் உள்ள தமிழ்நாடு சிறப்பு சமூகத் தாக்க மதிப்பீடு மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு பிரிவு ஒன்று உருவாக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Suresh V
    First published: