வங்க கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் நள்ளிரவு கரையை கடந்தது. இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு உட்பட பல்வேறு மாவட்டங்களில் இன்று கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று (டிசம்பர் 10) நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் இந்த தேர்வுகள் மற்றொரு நாளில் நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: மாண்டஸ் புயல்: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு
அதேபோல் இன்று (டிசம்பர் 10) நடைபெற இருந்த சென்னை பல்கலைகழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் தேர்வு குறித்த தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என சென்னை பல்கலைகழகம் கூறியுள்ளது.
மேலும் இன்று (டிசம்பர் 10) நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுள்ளது. அதே கால அட்டவனைப்படி தேர்வுகள் டிசம்பர் 17ஆம் தேதி நடைபெறும் என தொழில்நுட்பக் கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால், தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர் (Forest Apprentice) (தொகுதி VI) பதவி நியமனத்திற்கான தேர்வு இன்று (டிசம்பர் 10) நடைபெற இருந்தது. இந்நிலையில் இந்த தேர்வு மாண்டஸ் புயல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anna University, Cyclone Mandous