ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

லாரி டிரைவரின் மகன் நான்.. செம்பருத்தி சீரியல் நடிகரின் உருக்கமான கதை!

லாரி டிரைவரின் மகன் நான்.. செம்பருத்தி சீரியல் நடிகரின் உருக்கமான கதை!

செம்பருத்தி சீரியல் மூலம் கதிர் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர், சமீபத்தில் தனது குடும்ப பின்னணி குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்

செம்பருத்தி சீரியல் மூலம் கதிர் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர், சமீபத்தில் தனது குடும்ப பின்னணி குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்

செம்பருத்தி சீரியல் மூலம் கதிர் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர், சமீபத்தில் தனது குடும்ப பின்னணி குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்

 • 2 minute read
 • Last Updated :

  மக்கள் மத்தியில் வெள்ளித்திரை நடிகர்கள் எப்படி பிரபலமடைந்து வருகின்றனரோ, அதேபோல சின்னத்திரையில் சீரியலில் நடித்து வரும் நடிகர்களும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். மேலும் சில ஹிட் சீரியல்களில் வரும் அனைத்து நடிகர்களுக்கும் தனிப்பட்ட முறையில் ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர். அந்த வகையில், தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் தான் நடிகரும், விஜேவுமான கதிர். இவர், ஜீதமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பகும் செம்பருத்தி என்ற ஹிட் சீரியலில் ஆதிக்கு தம்பியாக நடித்து வருகிறார்.

  இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டில் இருந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அன்றில் இருந்து இன்று வரை விறுவிறுப்பு குறையாமல் சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரின் மூலம் கதிர் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர், சமீபத்தில் தனது குடும்ப பின்னணி குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். இதனால் ரசிகர்களிடையே பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் பெற்று வருகிறார். தனது குடும்ப பின்னணி குறித்து அவர் கூறியதாவது, " எனது அப்பா லாரி டிரைவர். அம்மா கட்டிட வேலைக்கு சென்றார்.

  அந்த சூழலில் தான் நான் என்னுடைய படிப்பை படித்தேன். பின் கோயில் விழாக்களில் நடனமாடுவேன். பின்னர் அந்த விழா மேடைகளில் தொகுப்பாளராக என் வாழ்க்கையை தொடங்கினேன். அதற்குப் பின்னர் தான் லோக்கல் சேனலில் ஆங்கரிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து பல மேடைகளில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தேன்." என்று தெரிவித்தார். பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

  இதையும் படிங்க.. பிக் பாஸில் பிரியங்காவை வெளியேற்ற முடிவு செய்த ராஜூ.. புரமோவில் அதிர்ச்சி!

  இதையடுத்து அவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. செம்பருத்தி சீரியலில் மூலம் எனக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்தது. மேலும் பேசிய அவர், "சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும் போதே எனக்கு ஜில் ஜங் ஜக் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இந்த ஷோ சென்றது.

  பின் இந்த ஷோ முடிந்து ரெண்டு வருஷத்துக்கு பிறகு தான் ‘மாஸ்டர் தி பிளாஸ்டர்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் முதல் மூன்று எபிசோடு தொகுத்து வழங்கி வந்தேன். ஆனால், எனக்கு தொடர்ந்து சீரியல் சூட்டிங் இருந்ததனால் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியவில்லை. அதேபோல் நான் சீரியலில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பெரிய நடிகருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த வாய்ப்பு கைநழுவி போனது.

  இருப்பினும், வெள்ளித்திரையில் நுழைய வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. விரைவில், அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கும்" என நம்பிக்கையாக இருப்பதாக தெரிவித்தார்.

  செம்பருத்தி சீரியல் மூலம் பெஸ்ட் ஆக்டர் என்ற விருது கிடைத்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

  இதையும் படிங்க.. வெளியானது குக் வித் கோமாளி 3 புரமோ.. ரசிகர்கள் தேடிய அந்த கோமாளி மட்டும் மிஸ்ஸிங்!

  என் குடும்பம் இல்லை என்றால் நான் இந்த அளவுக்கு வந்திருக்க முடியாது. என் குடும்பம் தான் என்னுடைய இன்ஸ்பிரேஷன் என்று கூறி இருந்தார். இவரது கதையை கேட்ட ரசிகர்கள் பலரும் அவரின் வளர்ச்சியை கண்டு வியந்தனர். மேலும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  First published: