முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நீர்வரத்து அதிகரிப்பால் செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகள் திறப்பு

நீர்வரத்து அதிகரிப்பால் செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகள் திறப்பு

புழல் ஏரி

புழல் ஏரி

செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு 2 ஆயிரம் கன அடியாக உயருமென எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஏரியின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

  • Last Updated :

கனமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் புழல் ஏரியில் இருந்து உபரி நீர் வினாடிக்கு 500 கனஅடி வீதம் திறக்கப்பட்டுள்ளது.

தொடர் மழையால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து பாதுகாப்பு கருதி மதகு 2-ன் வழியாக கால்வாயில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் புழல் ஏரியில் இருந்து உபரி நீர் வினாடிக்கு 500 கனஅடி வீதம் திறப்படுகிறது.

சென்னையின் பெரும்பாலான இடங்களில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தஞ்சை, நாகை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது. சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னையில் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது. ஒருசில இடங்களில் கனமழையும் பெய்கிறது. 10 மணி நேரமாக மழை தொடர்வதால் பல்வேறு சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. அண்ணா சாலையில் உள்ள ஜி.பி.சாலையில், மழைநீர், பெருக்கெடுத்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் படிக்க...தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு உருமாறிய கொரோனா

இதனால் செம்பரம்பாக்கம் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பிற்பகல் 2 மணி முதல் தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு 2 ஆயிரம் கன அடியாக உயருமென எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஏரியின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக குன்றத்தூர் உள்ளிட்ட தாழ்வான பகுதி மக்களுக்கு பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேபோன்று புழல் ஏரிக்கு சுமார் 2000 கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரயில் இருந்து மதியம் ஒரு மணி முதல் தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தண்டல் கழனி, சாமியார் மடம் வடகரை பகுதிகளில் தாழ்விடங்களில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

top videos

    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Chennai, Heavy Rainfall, Puzhal, Sembarambakkam