நீண்ட இழுபறிக்கு பிறகு காங்கிரஸ் கட்சிக்கு சட்டமன்ற தலைவர் தேர்வு!

செல்வப்பெருந்தகை

காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற துணைத்தலைவராக கிள்ளியூர் ராஜேஷ் தேர்வாகி உள்ளார்.

  • Share this:
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து திமுக தலைமையிலான கூட்டணியின் புதிய ஆட்சியும் அமைந்துவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவர் தேர்வு மட்டும் இழுபறியாகவே இருந்துவந்தது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி 18 உறுப்பினர்களை கொண்டுள்ளது. திமுக, அதிமுகவுக்கு அடுத்ததாக சட்டமன்றத்தில் 3வது பெரிய கட்சியாக விளங்குகிறது.

சட்டமன்ற தலைவரை தேர்வு செய்வதற்காக சென்னை சத்திய மூர்த்தி பவனில் இரண்டு முறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் விஜயதரணி, பிரின்ஸ், முனிரத்தினம், செல்வப்பெருந்தகை இடையே போட்டி நிலவுவதாக கூறப்பட்டது. ராஜ்குமார், கிள்ளியூர் ராஜேஷ் ஆகியோரும் போட்டியில் இருந்தனர்

இந்தநிலையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் எம்.எல்.ஏவான கு.செல்வப்பெருந்தகை காங்கிரஸ் கட்சியின் புதிய சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைத்தலைவராக கிள்ளியூர் ராஜேஷ் தேர்வாகி உள்ளார்.
Published by:Arun
First published: