டெல்லி பல்கலைக் கழகத்தில் தமிழும் தமிழ் நூல்களும் புறக்கணிப்பு : தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

செல்வப்பெருந்தகை

டெல்லி பல்கலைக்கழகத்தில் பாமா மற்றும் சுகிர்தராணி எழுதிய தமிழ் நூல்கள் அகற்றப்பட்டிருப்பது கண்டனத்திற்கு உரியது என்கிறார் செல்வப்பெருந்தகை.

 • Share this:
  டெல்லி பல்கலைக் கழகத்தில் தமிழும் தமிழ் நூல்களும் புறக்கணிக்கப்படுவதை தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

  தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்றுவரும், சென்னை கலைவாணர் அரங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, பாஜக அரசு தொடர்ந்து தமிழையும் தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக குற்றம் சாட்டினார்.

  இதனை வெளிப்படுத்தும் விதமாகத் தான், டெல்லி பல்கலைக்கழகத்தில் பாமா மற்றும் சுகிர்தராணி எழுதிய தமிழ் நூல்கள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எதற்காக நூல்கள் அகற்றப்பட்டது என்று காரணம் தெரிவிக்கவில்லை. அவசமாக இரவோடு இரவாக அகற்ற காரணம் ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

  அவர்களின் நூல்கள், ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை, ஆதிவாசி மக்களின் வாழ்வியலை விளக்கும் நூல்களாகும். கடந்த 2007ல் முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சியில் புது டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறை ஏற்படுத்தப்பட்டு தனியாக நிதி ஒதுக்கி தமிழை வளர்த்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தொடர்ந்து தமிழை புறக்கணிக்கும் போக்கு நிலவுகிறது.

  Must Read : மொழிக் கொள்கை, நீட் தேர்வு : தமிழக அரசின் முடிவுகளுக்கு அதிமுக ஆதரவு

  எனவே, நூல்கள் அகற்றப்பட்டதற்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, புதுடெல்லியில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழையும், தமிழ்நூல்களையும் அகற்றப்படுவதை தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு இதில் தலையிட்டு, நரேந்திர மோடி அரசிடம் இதனை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை அப்போது வலியுறுத்தினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Suresh V
  First published: