• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மதுரையில் வரிசையில் நின்று பிரியாணி சாப்பிட்டு, இளைஞர்களுடன் செல்ஃபி எடுத்து கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரையில் வரிசையில் நின்று பிரியாணி சாப்பிட்டு, இளைஞர்களுடன் செல்ஃபி எடுத்து கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ

அமைச்சர் செல்லூர் ராஜூ

அமைச்சர் செல்லூர் ராஜூ

பிரியாணி தட்டுடன் உலா வந்த அமைச்சருடன் அங்கிருந்த இளைஞர்கள், தொண்டர்கள் செல்ஃபி எடுத்து கொண்டனர்.

  • Share this:
மதுரையில் நடைபெற்ற அதிமுக கட்சி விழாவில் பங்கேற்ற அமைச்சர் செல்லூர் ராஜூ தொண்டர்களுடன் சேர்ந்து வரிசையில் நின்று தட்டில் பிரியாணி வாங்கி சாப்பிட்டார். பின்னர், பிரியாணி தட்டுடன் உலா வந்த படி தொண்டர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

மதுரை காமராஜர் சாலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிரணியினரும், தொண்டர்களும் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் பங்கேற்ற தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் ஜெயலலிதாவின் பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடுவதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார். கூட்டம் முடிந்த பின்னர் நிகழ்வில் பங்கேற்றவர்கள் அனைவருக்கும் இரவு உணவாக பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.நிர்வாகிகளும், தொண்டர்களும் வரிசையில் நின்று பிரியாணியை வாங்கி, சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த அமைச்சர் செல்லூர் ராஜூ, அவரும் சேர்ந்து உணவு வாங்கும் வரிசையில் நின்றார்.நிர்வாகிகள் தனியாக உணவு பெற்று வருவதாக கூறினார். அதை, மறுத்து விட்டு வரிசையிலே நின்று உணவு வாங்கினார்.பாக்கு மட்டை தட்டில் பிரியாணியை வாங்கிக் கொண்டு தொண்டர்களுடன் நின்று சிரித்துப் பேசியபடி சாப்பிட்டார்.

பிரியாணி தட்டுடன் உலா வந்த அமைச்சருடன் அங்கிருந்த இளைஞர்கள், தொண்டர்கள் செல்ஃபி எடுத்து கொண்டனர்.
பின்னர், பிரியாணி சாப்பிட்ட படியே கேமரா முன்பு நின்று கொண்டு, "அம்மா பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது பற்றி, ஆலோசனை நடத்தினோம். தொண்டர்களுக்கு பிரியாணி கொடுத்தோம். அவர்களுடன் சேர்ந்து நானும் சாப்பிட்டு வருகிறேன். ருசியாக உள்ளது. நீங்களும் வேண்டுமென்றால் சாப்பிட்டு விட்டு போங்கள்..." என்றார்.

வழக்கமாகவே செல்லும் இடங்களில் ஏதாவதொரு கலகலப்பான செயலை செய்து தொண்டர்கள் மத்தியில் பெயர் பெற முயற்சிப்பார் அமைச்சர் செல்லூர் ராஜு. அதுவும் அவரது சொந்த ஊரான மதுரை என்றால் கேட்கவே வேண்டாம், இறங்கி வேலை செய்வார்.அப்படி தான் இப்போதும் தொண்டர்களுடன் ஒன்றாக சேர்ந்து பிரியாணி சாப்பிட்டு தொண்டர்களிடம் பிரியமாக முயற்சித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: