Home /News /tamil-nadu /

2026-க்கு முன்பே சட்டமன்ற தேர்தல் வரலாம் - செல்லூர் ராஜூ

2026-க்கு முன்பே சட்டமன்ற தேர்தல் வரலாம் - செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூ

திமுகவில் சமீபத்தில் இணைந்த பலர், கடந்த காலங்களில் அதிமுகவில் இருந்து பதவி, பணம் சம்பாதித்தவர்கள்.

    எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் அடுத்தடுத்து ரெய்டு நடந்து வரும் நிலையில் தமிழகத்தில் 2026-க்கு முன்பே சட்டமன்ற தேர்தல் வரலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

    எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்த போது பதவியை தவறாக பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக, வேலுமணி உள்ளிட்ட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையல், எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்துவது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் அதிமுக போக்குவரத்து தொழிலாளர் சங்க கூட்டத்தில் பேசுகையில், “திமுகவில் சமீபத்தில் இணைந்த பலர், கடந்த காலங்களில் அதிமுகவில் இருந்து பதவி, பணம் சம்பாதித்தவர்கன். 2026க்கு முன்னதாகவே தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் சூழல் உருவாகலாம்” என்று கூறியுள்ளார்.

    Must Read : எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு - அதிமுகவினர் போராட்டம்

    இந்நிலையில், கோவை குனியமுத்தூரில் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடப்பதை கண்டித்து அங்கே திரண்ட நூற்றுக் கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு, உணவு பொட்டலங்கள், டீ உள்ளிட்டவை விநியோகிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, தொண்டர்கள் வாசலில் அமர்ந்தபடி தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    முன்னதாக, பொள்ளாச்சி ஜெயராமன் இந்த ரெய்டு குறித்து பேசுகையில், “இந்த சோதனை அரசியல் வாங்கும் நடவடிக்கை. உள்ளாட்சி தேர்தலில் எங்களை சோர்வடைய வைக்கவே இந்த நடவடிக்கை எனினும் இந்த நடவடிக்கைகள் எங்களை சோர்வடைய வைக்காது.” என்று கூறினார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Sellur Raju, SP Velumani

    அடுத்த செய்தி