ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கூட்டணியில் இல்லாத பாமகவின் கருத்துக்கு பதில் கூறத் தேவையில்லை - செல்லூர் ராஜு

கூட்டணியில் இல்லாத பாமகவின் கருத்துக்கு பதில் கூறத் தேவையில்லை - செல்லூர் ராஜு

செல்லூர் ராஜு

செல்லூர் ராஜு

வரும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் புதிய கூட்டணி உருவாக வாய்ப்பு இருப்பதாக, அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சட்டப்பேரவை தேர்தலில் பாமக வெற்றி பெறக் கூடாது என்பதற்காக, கூட்டணிக் கட்சிகள், கூட்டணித் தர்மத்தை மீறியதாக ராமதாஸ் குற்றம் சாட்டிய நிலையில், கூட்டணியில் இல்லாத பாமகவின் கருத்துக்கு பதில் கூறத் தேவையில்லை என அதிமுக தெரிவித்துள்ளது.

சேலம் சீலநாயக்கன்பட்டியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாமக எம்.எல்.ஏ.க்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அவரது முன்னிலையிலேயே புகழ்ந்து தள்ளினர். இந்நிலையில், சேலம் அருகே சூரமங்கலத்தில் நடைபெற்ற பாமகவின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக் குழு கூட்டத்தில் பங்கேற்ற ராமதாஸ், கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாமக வெற்றி பெறக் கூடாது என்பதற்காக, கூட்டணி கட்சிகள், கூட்டணி தர்மத்தை மீறியதாக சாடினார்.

ராமதாஸின் இந்த கருத்து, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, அதிமுக கூட்டணியில் பாமக இல்லாததால் அவர்களின் கருத்துக்கு பதில் கூற வேண்டியதில்லை என அவர் தெரிவித்தார்.

பாமக எம்.எல்.ஏக்கள் ஸ்டாலினை புகழ்வதும், அதிமுக மீது ராமதாஸ் குற்றஞ்சாட்டுவதும் அடுத்தடுத்து நிகழ்ந்திருப்பதால், வரும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் புதிய கூட்டணி உருவாக வாய்ப்பு இருப்பதாக, அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

Must Read : தனித்து போட்டியிட்டிருந்தால் ஆட்சியை கைப்பற்றி இருப்போம் - ராமதாஸ்

ஒருவேளை திமுக உடன் பாமக கூட்டணி அமைந்தாலும், அது எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பதை உறுதியாக கூற முடியாது என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

First published:

Tags: ADMK, Dr Ramadoss, PMK, Sellur Raju