எம்.ஜி.ஆர் மலையாளி, பிராமணர் ஜெயலலிதா, இருந்தாலும் ஏற்றுக்கொண்டோம் - அமைச்சர் செல்லூர் ராஜு பரபரப்பு பேச்சு

மலையாளியாக இருந்தாலும் எம்ஜிஆரையும், பிராமணராக இருந்தாலும் ஜெயலலிதாவையும் தலைவராக ஏற்றுக் கொண்டோம் என அமைச்சர் செல்லூர் ராஜூ ப

எம்.ஜி.ஆர் மலையாளி, பிராமணர் ஜெயலலிதா, இருந்தாலும் ஏற்றுக்கொண்டோம் - அமைச்சர் செல்லூர் ராஜு பரபரப்பு பேச்சு
அமைச்சர் செல்லூர் ராஜு
  • Share this:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 72-வது பிறந்தநாள்  முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட மத்திய சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பாக நலத்திட்டம் வழங்கி பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சாதனைக்கு மேல் சாதனை படைத்து வருகிறார்.எடப்பாடியை சாதாரணமாக எடைபோட்ட  அனைவரும் பின் நோக்கி செல்கிறார்கள். அதிமுகவில் 17 லட்சம் தொண்டர்கள் இருக்கும்போதே கருணாநிதியால் கோட்டை பக்கம் வரமுடியவில்லை. லீலாவதியை  கொலை செய்தவர்கள் எப்படி பெண்களுக்கு பாதுகாப்பு தர முடியும்? ரவுடிகளின் சரணாலயம் திமுக. அண்ணா வளர்த்த கட்சியை கார்ப்பரேட் கம்பெனியிடம் அடமானம் வைத்து விட்டார் ஸ்டாலின். இது நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்வது போல் இருக்கிறது. உங்களுக்கு சுயமாக சிந்திக்கும் திறமை இல்லையா தமிழக மக்களுக்கு என்ன தேவை என்று தமிழனுக்கு தெரியுமா பீகார்காரருக்கு  தெரியுமா? அனைத்து மதத்தினரையும் அரவணைத்துச் செல்லக் கூடிய கட்சி அதிமுக.


எம்.ஜி.ஆர் மலையாளியாக இருந்தாலும் அவர் ஆரம்பித்த கட்சியை ஒன்றரை கோடி தொண்டர்கள் தூக்கி நிறுத்தி இருக்கிறோம். ஜெயலலிதா பிராமணராக இருந்தாலும் அவரை திராவிட கட்சியின் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறோம். ஆண்களைக் காட்டிலும் பெண்கள்தான் நிர்வாகத்தில் சிறந்தவர்கள் என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார்கள்.

மாநகராட்சி தேர்தல் விரைவில் வரப்போகிறது மதுரையில் 53 விழுக்காடு பெண்களுக்கு வாய்ப்பு தரப்பட இருக்கிறது. விவசாயி பயிர் கடன் 49000 கோடியை அரசு வழங்கியிருக்கிறது. 6300 கிலோ தங்கத்தை இலவசமாக கொடுத்த ஒரே மாநிலம் தமிழகம்.

சட்டமன்றத்தில் அம்மாவை பார்த்தால்மு.க.ஸ்டாலின் நடுங்கி விடுவார். கலைஞர் 1980-இல் ஏமாந்தார். மு.க.ஸ்டாலின் 2021-இல் ஏமாறப் போகிறார். ஸ்டாலினை பார்க்க வேண்டும் என்றால் அவர் மருமகனைப் பார்க்கவேண்டும், மகனை பார்க்க வேண்டும். அதற்குப் பின்புதான் அவரை பார்க்க முடியும், என்று பேசினார்.Also See...
First published: February 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading