அதிமுக கூட்டணிக்கு விசிக வந்தால் ஏற்றுக்கொள்வோம், திருமாவளவன் எங்கள் சகோதரர் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக கூட்டணிக்கு விசிக வந்தால் ஏற்றுக்கொள்வோம், திருமாவளவன் எங்கள் சகோதரர். திருமாவளவன் மீது ஜெயலலிதா அன்பும், பாசமும் கொண்டவர். எடப்பாடி பழனிசாமி மீதும் பாசம் கொண்டவர் என கூறினார்.
எடப்பாடி பழனிசாமிக்கு மதுரை ராசியான இடம். மதுரை வரும்போதுதான் அவருக்கு வெற்றிமேல் வெற்றி வருகிறது. 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி மதுரைக்கு வருகிறார். ஆன்லைன் ரம்மி மசோதா விவகாரத்தில், ஆளுநருக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது. ஆன்லைன் ரம்மியை தடை செய்ய மாநில அரசுக்கு அனுமதி இல்லை, மத்திய அரசுக்கே அனுமதி உள்ளது என ஆளுநர் கூறுகிறார்.
அதிமுகவுக்கு எதிராக பாஜகவின் நடவடிக்கை கண்டிக்கதக்கது. பாஜக தலைமை இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என உறுதி அளித்துள்ளதாக பேசினார். ஜெயலலிதா உடன் ஒப்பிடுவதற்கு இங்கு யாரும் இல்லை. இனிமேல் பாஜக அதுபோன்ற செயல்களில் ஈடுபடாது. கூட்டணியை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். கூட்டணி என்பது கொள்கை சார்ந்தது அல்ல.
எங்களுக்கு நெருக்கடி கொடுக்க ஆண்டவனால் கூட முடியாது என செல்லூர் ராஜூ தெரிவித்தார். பிரதமர் மோடி சிறப்பாக ஆட்சி செய்கிறார். தமிழ் மொழி, கலாச்சாரத்தை உலகம் அறிய செய்கிறார். அவரை போன்று ஒரு பிரதமரை இதுவரை நாங்கள் பார்த்ததில்லை என செல்லூர் ராஜூ கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Sellur Raju, Thol Thirumaavalavan, VCK