முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சசிகலா விவகாரத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே முரண்பாடு ஏன்? - செல்லூர் ராஜூ விளக்கம்

சசிகலா விவகாரத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே முரண்பாடு ஏன்? - செல்லூர் ராஜூ விளக்கம்

ஓபிஎஸ்-இபிஎஸ்

ஓபிஎஸ்-இபிஎஸ்

சசிகலா விவகாரத்தில், அனைவரும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்ற கருத்தை தான் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சொன்னார், அதில் என்ன தவறு இருக்கிறது என்று செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சசிகலா விவகாரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே முரண்பாடு இருப்பது ஏன்? என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரையில் விளக்கம் அளித்துப் பேசினார்.

கேள்வி : சசிகலா விவகாரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் கருத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் கருத்துக்கும் முரண்பாடு உள்ளதே? என்ற கேள்விக்க பதில் அளிதுப் பேசிய செல்லூர் ராஜூ, “சசிகலா விவகாரத்தில் அதிமுக கட்சிக்குள் சர்ச்சையே கிடையாது. பழுத்த மரத்தில் தான் கல்லடி படும். சசிகலா குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கருத்து சொன்ன பிறகு, இணை ஒருங்கிணைப்பாளர் கருத்து சொல்லவில்லை. அனைவரும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்ற கருத்தை தான் ஒருங்கிணைப்பாளர் சொன்னார். அதில் என்ன தவறு இருக்கிறது.

ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அவர் சொன்னதில் தவறு எதுவும் இல்லை. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை செய்வோம் என்று தான் ஓபிஎஸ் சொன்னார். அது தவறாக புரிந்து கொள்ளப்பட்ட காரணத்தால், பிற நிர்வாகிகளும் அதற்கு எதிர் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த கருத்துக்களை இப்போது சர்ச்சையாக மாற்ற விரும்பவில்லை” இவ்வாறு கூறினார்.

இந்நிலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவில் பங்கேற்க இன்று மாலை மதுரை வரும் சசிகலா தொண்டர்களை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, இன்று மதியம் 1 மணிக்கு தஞ்சாவூரில் இருந்து புறப்பட்டு, சாலை மார்க்கமாக மதுரை வரும் அவர், தல்லாகுளம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்குகிறார்.

அக்டோபர் 30 ஆம் தேதி பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா நடைபெறவுள்ள நிலையில், அதிமுக-அமமுக தொண்டர்களிடையே குழப்பத்தை தவிர்க்கும் பொருட்டு, நாளை காலையே (அக்டோபர் 29) மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தேவர் சிலைக்கும், தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மருதுபாண்டியர் சிலைக்கும் மாலை அணிவிக்க உள்ளார். அதனை தொடர்ந்து பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் மரியாதை செய்யவுள்ளார். பின்னர் சாலை மார்க்கமாகவே தஞ்சை செல்லவுள்ளார்.

செல்லூர் ராஜூ

Must Read : மதுரையில் இன்று தொண்டர்களை சந்திக்கிறார் சசிகலா

இன்றும் நாளையும் சசிகலாவுக்கு வழியிலும், ஹோட்டலிலும் வரவேற்பு அளிக்க தொண்டர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும், ஹோட்டலில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: OPS - EPS, Sasikala, Sellur Raju