• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • எங்கள் ஆட்சியில் விவசாயக்கடன் தள்ளுபடி செய்ததில் முறைகேடு இல்லை - அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு செல்லூர் ராஜூ பதில்

எங்கள் ஆட்சியில் விவசாயக்கடன் தள்ளுபடி செய்ததில் முறைகேடு இல்லை - அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு செல்லூர் ராஜூ பதில்

அமைச்சர் செல்லூர் ராஜூ

அமைச்சர் செல்லூர் ராஜூ

அ.தி.மு.க ஆட்சியில் விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

  • Share this:
    மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்து இறக்கும் நபர்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் முறைகேடு நடக்கிறது என்றும், தடுப்பூசி விவகாரத்தில் மக்களை அரசு அழைக்கழிப்பதாகவும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றச்சாட்டியுள்ளார்.

    மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘மதுரையில் அசாதாரண சூழல் உள்ளது.
    தடுப்பூசி போட மக்கள் ஆர்வமாக உள்ளார்கள். ஆனால் தடுப்பூசி எப்போது வரும் என்பது அரசுக்கே தெரியவில்லை. ஊசி செலுத்துவது தொடர்பாக அரசு சரியான விபரங்களை வெளியிடவில்லை.

    முகக் கவசம் எப்படி போடுவது என முதலமைச்சர் விளக்கிக் கொண்டிருக்கிறார். அது எல்லோருக்கும் தெரியும். தடுப்பூசி வாங்குவதில் முதலமைச்சர் சாணக்கிய தனமாக பேச வேண்டும். அதை தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இறந்தவர் குடும்பத்திற்கு பிரதமர் 10 லட்ச ரூபாய் அறிவித்து உள்ளார், ஆனால் முதல்வர் 5 லட்ச ரூபாய் கொடுத்து உள்ளார். எங்களுடைய ஆட்சியில் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் கொடுக்க சொன்ன ஸ்டாலின் இப்போது 5 லட்ச ரூபாய் கொடுப்பது ஏன்?

    மதுரையில் கொரோனா பாதித்து இறக்கும் நபர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்குவதில் முறைகேடு உள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் இறப்பு சான்றிதழ் தரப்படுவதே இல்லை. இறப்பு சான்றிதழில் இறப்பிற்கான காரணம் இடம் பெறாது என அரசு மருத்துவமனை அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் டி.எஸ்.பி மகன் மறைவுக்கு இறப்பு சான்றிதழ் வழங்கப்படவில்லை. டீனிடம் விளக்கம் கேட்டதற்கு, முறையான விளக்கம் கிடைக்கவில்லை. இது என்ன துக்ளக் ஆட்சியா?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கூட்டுறவுத் துறையை பற்றி ஐ.பெரியசாமிக்கு ஒன்றும் தெரியாது. அவரே விருப்பம் இல்லாமல் தான் இந்த துறையில் இருப்பதாக தகவல். விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்ததில் வெளிப்படை தன்மை உள்ளது. தவறு செய்தவர்கள் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. என்னுடைய துறையில் குறை இல்லை; அதை ஐ.பெரியசாமி ஆதாரப்பூர்வமாக நிரூபித்தால் நான் சட்டமன்றத்தில் விவாதிக்க தயார்’ என்று தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: