ஆண்டவனே நினைத்தாலும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாது! வைரலான செல்லூர் ராஜூ பேச்சு

 தற்போது அனைத்து ஷாப்பிங் மால்களிலும் மக்கள் கூட்டம் அலை மோதியபடி தான் உள்ளது. வருமானம் அதிகரிக்கும்போது விலைவாசி உயர்வு என்பது இருந்துகொண்டேதான் இருக்கும்.

ஆண்டவனே நினைத்தாலும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாது! வைரலான செல்லூர் ராஜூ பேச்சு
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு
  • News18
  • Last Updated: January 7, 2020, 10:43 PM IST
  • Share this:
விலைவாசி உயர்வை ஆண்டவனே நினைத்தாலும் கட்டுப்படுத்த முடியாது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியது சட்டப்பேரவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சட்டப்பேரவையில் இன்று மாலை நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க உறுப்பினர் பிச்சாண்டி வெங்காய விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, "பல்வேறு மாநிலங்களில் பெய்த தொடர் மழை காரணமாக வெங்காயம் அழுகியதால் விலை உயர்ந்ததாக குறிப்பிட்டார். வெங்காயத்திற்கு நிரந்தர விலை என்பது கிடையாது. 95 நாட்கள் மட்டுமே விளையக்கூடியது. தற்போது வெங்காய விலை படிப்படியாக குறைந்து வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, "தி.மு.க ஆட்சியில் விலைவாசி உயர்வு பற்றி தாங்கள் கேள்வி எழுப்பிய போது பொருளாதார வளர்ச்சி காரணமாக விலைவாசி உயர்ந்துள்ளதாக அப்போதைய அமைச்சர்கள் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டினார். தற்போது அனைத்து ஷாப்பிங் மால்களிலும் மக்கள் கூட்டம் அலை மோதியபடி தான் உள்ளது. வருமானம் அதிகரிக்கும்போது விலைவாசி உயர்வு என்பது இருந்துகொண்டேதான் இருக்கும்.
விலைவாசி உயர்வை ஆண்டவனே நினைத்தாலும் கட்டுப்படுத்த முடியாது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

Also see:

 
First published: January 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்