Home /News /tamil-nadu /

மதுரையில் அனுமதி இன்றி வளர்க்கப்பட்ட யானை... பல மணி நேர போராட்டத்திற்கு பின்பு பறிமுதல்

மதுரையில் அனுமதி இன்றி வளர்க்கப்பட்ட யானை... பல மணி நேர போராட்டத்திற்கு பின்பு பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட யானை

பறிமுதல் செய்யப்பட்ட யானை

Madurai : மதுரையில் அனுமதி பெறாத வளர்ப்பு யானையை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து முகாமிற்கு அனுப்பி வைத்தனர்.

மதுரையில் அனுமதி பெறாத வளர்ப்பு யானையை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். எதிர்ப்பு தெரிவித்த வளர்ப்பாளரால் பல மணி நேர போராட்டத்திற்கு பின்பு அந்த யானை முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மதுரை  தமுக்கம் மைதானம் அருகே கமலா நகரில் உள்ள மாலா என்பவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் பீகாரிலிருந்து ரூபாலி என்ற பெண் யானையை வாங்கி வளர்த்து வருகிறார்.
இவர் முறையான அனுமதி மற்றும் ஆவணங்கள் இல்லாமல் யானையை வாங்கி வந்து வளர்ப்பதாகவும், கோவில் விழா மற்றும் பிச்சை எடுக்க பயன்படுத்துவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து  வனத்துறை அதிகாரிகள் யானை வளர்ப்பிற்கு மறுப்பு தெரிவித்தனர்.

இதனால், யானையின் உரிமையாளர் தரப்பு நீதிமன்றத்தை நாடியதை தொடர்ந்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் யானை வாங்கியது தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.   இந்நிலையில், வளர்ப்பு யானையான ரூபாலி உரிய பராமரிப்பு இல்லாமல் இருப்பதை கருத்தில் கொண்டு வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தலைமை வன பாதுகாவலர் உத்தரவின்படி யானையை பறிமுதல் செய்ய வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர்.

அதன்படி, அந்த யானையை பறிமுதல் செய்து  திருச்சியில் உள்ள எம்.ஆர்.பாளையம் யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்திற்கு அழைத்து செல்ல மாவட்ட வனத்துறை அதிகாரி குருசாமி  தலைமையில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் வந்திருந்தனர்.

ஆனால், யானையை அழைத்து செல்வதற்கான விளக்க நோட்டீஸை யானையின் உரிமையாளர் மாலா வாங்க மறுத்ததால் கதவில் ஒட்டிய வனத்துறையினர் யானையை அழைத்து செல்ல முயன்றனர்.
அப்போது யானை உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்ததால் சலலப்பு ஏற்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளபோது வனத்துறையினர் யானையை அழைத்து செல்வதாக குற்றம் சாட்டிய உரிமையாளர், யானைக்கு உடல்நலக் குறைவு உள்ள நிலையில் அதற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவ சிகிச்சை பெற்று வரும் யானையை வேறு இடத்திற்கு மாற்றக் கூடாது என்ற விதிமுறையை வனத்துறையினர் மீறுவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

Must Read : டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட முகமைகளால் நடத்தப்படும் கட்டாய தமிழ் தகுதித்தேர்வு.. இவர்களுக்கு மட்டும் விலக்கு: தமிழக அரசு அறிவிப்பு

இதனிடையே, யானையை அழைத்து செல்லும் நடவடிக்கையில் வனத்துறை அதிகாரிகள் ஈடுப்பட்ட நிலையில் யானை பாகன் தலைமறைவாகி விட்டார். யானையை லாரியில் ஏற்ற முடியாமல் அதிகாரிகள் தவித்தனர். வேறொரு யானை பாகனை அழைத்து வந்து அதிகாலை 3 மணி அளவில் யானையை லாரியில் ஏற்றி திருச்சி முகாமிற்கு கொண்டு சென்றனர்.
Published by:Suresh V
First published:

Tags: Elephant, Madurai

அடுத்த செய்தி