• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • முறைகேடுகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகளின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் - உயர்நீதிமன்ற நீதிபதிகள்

முறைகேடுகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகளின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் - உயர்நீதிமன்ற நீதிபதிகள்

மதுரை உயர் நீதிமன்றம்

மதுரை உயர் நீதிமன்றம்

மக்கள் வரிப்பணத்தை கொள்ளை அடிக்கும் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் சமூக விரோதிகளே என்றனர்.

  • Share this:
    மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிப்பவர்கள் யாராக இருந்தாலும் சமூக விரோதிகளே என்றும், அவர்களுடைய சொத்துக்களை பறிமுதல் செய்ய வெண்டும் எனவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை சேர்ந்த ராஜா என்பவர் தொடர்ந்த வழக்கில், ஆசிரியர் ஒருவர் விதிமீறி பெற்ற இலவச வீட்டு மனை பட்டாவை ரத்து செய்து, முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென கேட்டிருந்தார். நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் நடைபெற்ற விசாரணையில், தாசில்தாரும், ஆசிரியரும் லட்சம் ரூபாய் ஊதியம் பெறும் நிலையிலும் பேராசையுடன் லஞ்சம் பெறுகின்றனர் என வருத்தம் தெரிவித்தனர்.

    மேலும், மக்கள் வரிப்பணத்தை கொள்ளை அடிக்கும் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் சமூக விரோதிகளே என்றனர். ஊழலில் ஈடுபடுபவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் அப்போது தான் ஊழல் ஒழியும் எனவும் தெரிவித்தனர்.

    தவறு செய்யும் அதிகாரிகள் மீது ஆரம்பத்திலேயே காவல் நிலையத்தில் புகாரளிக்க வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள், தவறு செய்யும் ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்தால் மட்டும் போதுமா? அவர்கள் மீது ஏன் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பினர். வழக்கு விசாரணையை டிசம்பர் 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.





    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: