முதல்வராக பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு சீமான் வாழ்த்து

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் நாளை பதவியேற்கவுள்ள நிலையில் சீமான் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 • Share this:
  தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க மட்டும் 125 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதனையடுத்து, நேற்று நடைபெற்ற தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தி.மு.க சட்டமன்றக் குழுத் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனையடுத்து, இன்று காலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆட்சியமைக்க உரிமைகோரினார்.

  அதனைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலினை ஆட்சியமைப்பதற்கு ஆளுநர் அழைப்புவிடுத்தார். நாளை மறுநாள் காலை 9 மணிக்கு மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்கவுள்ளார். இந்தநிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழத்து தெரிவித்துள்ளார்.

  அவருடைய ட்விட்டர் பதிவில், ‘தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று நாளை ஆட்சியமைக்கவிருக்கும் திமுகவுக்கும், அதன் சட்டமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கவிருக்கும் ஐயா மு.க.ஸ்டாலினுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: