தமிழ்நாடு காவல்துறையின் தலைவராக சைலேந்திர பாபு நியமனம் செய்யப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு டிஜிபியாக உள்ள திரிபாதி இன்றுடன் ஓய்வுப்பெறுவதால் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியை தேர்வு செய்யும் பணிகள் சில நாட்களாக நடந்து வந்தது. டிஜிபி பதவியை கைபற்ற கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில், அது தொடர்பான பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு தமிழக அரசு அனுப்பியது. இந்நிலையில், அந்த பட்டியல் அடிப்படையில் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபுவை நியமித்து அரசு அறிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 1962 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி பிறந்தவர் சைலேந்திர பாபு. மதுரையில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி கல்லூரியில் இளங்கலை படிப்பை முடித்தார். இதன் பின்னர் 1987 ஆம் ஆண்டு தமிழக கேடரில் ஐ.பி.எஸ் அதிகாரியாக தேர்வு பெற்றார். 1987 ஆம் ஆண்டு தமிழக கேடரில் ஐ.பி.எஸ் அதிகாரியாக தேர்வு பெற்ற சைலேந்திரபாபு, தர்மபுரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியை தொடங்கியவர்.
அதன் பின்னர், துணை ஆணையர், இணை ஆணையர், ஆணையர், வடக்கு மண்டல ஐஜி, சிறைத் துறை ஏ.டி.ஜி.பி. என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். சைலேந்திர பாபு, தற்போது ரயில்வே துறை டிஜிபியாக தற்போது பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நேர்மையானவர் மற்றும் கண்டிப்பானவர் என்று பெயர் பெற்ற சைலேந்திர பாபு தமிழக காவல்துறை தலைவராக நியமிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியிர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாடு காவல்துறையின் புதிய தலைமை இயக்குநராக சைலேந்திர பாபு நியமனம் செய்யப்பட்டிருக்கும் செய்தியறிந்து மகிழ்வுற்றேன். தகுதியும், திறமையும் கொண்டு அர்ப்பணிப்புணர்வோடு அயராது பணியாற்றி, தனது சீரிய செயல்பாடுகளின் மூலம் இளைய தலைமுறையினரின் மனகவர்ந்த சைலேந்திர பாபு இப்பொறுப்புக்குத் தேர்வு செய்திருப்பது மிகப்பொருத்தமானதாகும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அவரது பணிகள் சிறக்கவும், சட்டம் ஒழுங்கைச் சிறப்பான முறையில் பேணிக்காத்து சமூக அமைதியை நிலைநாட்டவும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Seeman, Sylendra Babu