நாம் தமிழர் கட்சி சார்பில் 234 தொகுதி வேட்பாளர்கள் இன்று அறிமுகம் - கொளத்தூரில் சீமான் போட்டி?

நாம் தமிழர் கட்சி சார்பில் 234 தொகுதி வேட்பாளர்கள் இன்று அறிமுகம் - கொளத்தூரில் சீமான் போட்டி?

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள், சென்னையில் ஒரே மேடையில் இன்று அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளனர்.

 • Share this:
  தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக தங்களது கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை பங்கீடு செய்வதில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மறுபுறம் டிடிவி தினகரன் மற்றும் கமல்ஹாசன் மூன்றாவது அணி அமைக்க தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கிடையில், நாம் தமிழர் கட்சியினர் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து, அதற்கான பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டது.

  இந்நிலையில், மார்ச் 20-ம் தேதி, சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தனது கட்சியின் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைப்பதாக, அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருந்தார். ஆனால், தேர்தல் தேதி முன்பே அறிவிக்கப்பட்டதால் அதில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, சென்னையில் இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் அறிமுகம் செய்து வைக்கப்படுகின்றனர். அதன்படி, ஆண் வேட்பாளர்கள் 117 பேர், பெண் வேட்பாளர்கள் 117 பேர் என மொத்தம் 234 வேட்பாளர்கள் களம் காணுகின்றனர்.

  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  மேலும் படிக்க... திருச்சியில் திமுகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் - கட்சிசாராத வல்லுநர்கள் பலர் பங்கேற்பு  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: