ரஜினிகாந்த்தின் முடிவை முழுமையாக வரவேற்கிறேன் - சீமான் வரவேற்பு

ரஜினிகாந்த்தின் முடிவை முழுமையாக வரவேற்கிறேன் - சீமான் வரவேற்பு

ரஜினிகாந்த், சீமான்

அரசியல் கட்சி தொடங்கவில்லை என்ற ரஜினிகாந்தின் முடிவை முழுமையாக வரவேற்கிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவாரா என்பது குறித்து நீண்ட காலமாக எதிர்பார்ப்பு இருந்துவந்த நிலையில், வரும் ஜனவரி மாதம் கட்சி தொடங்குவேன். அதற்கான தேதியை டிசம்பர் 31-ம் தேதி அறிவிப்பேன் என்று சமீபத்தில் தெரிவித்தார். அதனையடுத்து, அவர் கட்சி தொடங்குவது உறுதியானது. இந்தநிலையில், ஹைதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்புக்காக பங்கேற்றிருந்தபோது, உடன் பணியாற்றிய நான்கு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. ஆனால், ரஜினிகாந்த் கொரோனா பாதிப்பு இல்லை என்றபோதிலும், அவரது ரத்த அழுத்தம் சீராக இல்லாத மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாள்கள் சிகிச்சைப் பெற்றார்.

    இந்தநிலையில், நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருந்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும். இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும் நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும். மன்னியுங்கள்’ என்று அறிவித்து கட்சி தொடர்பான விவகாரங்களுக்கு முற்றுப்புள்ளிவைத்துவிட்டார் ரஜினிகாந்த்.

    முன்னதாக, ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை மிகத் தீவிரமாக எதிர்த்துவந்தவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். ரஜினியின் இந்த முடிவுக்கு சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக சீமானின் ட்விட்டர் பதிவில், ‘இந்தியத் திரையுலகின் சிறந்த திரைக்கலைஞர் ஐயா ரஜினிகாந்த், தனது உடல்நலனைக் கருத்திற்கொண்டு எடுத்துள்ள முடிவை முழுமையாக வரவேற்கிறேன். அவர் முழு உடல்நலம் பெற்று, கலையுலகப் பயணத்தைத் தொடர எனது வாழ்த்துகளையும், பேரன்பையும் தெரிவிக்கின்றேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: