• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு ரஜினிகாந்த் ஆதரவு! திருமாவளவன், சீமான் விமர்சனம்

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு ரஜினிகாந்த் ஆதரவு! திருமாவளவன், சீமான் விமர்சனம்

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்து சிறப்பான நடவடிக்கையை அமித்ஷா மேற்கொண்டுள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    ரஜினிகாந்திடமிருந்து மத்திய அரசுக்கு எதிரான கருத்துகளை எதிர்பார்க்க முடியாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார்.

    குடியரசு துணைத்தலைவர் வெங்கையாநாயுடு எழுதிய புத்தக வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், ‘அமித்ஷாவும், வெங்கையாவும் கிருஷ்ணன் அர்ஜுனன் போன்றவர்கள். இதில் யார் கிருஷ்ணன், அர்ஜுனன் என்பது அவர்கள் இருவருக்கு தான் தெரியும்.

    திருமாவளவன்


    காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்து சிறப்பான நடவடிக்கையை அமித்ஷா மேற்கொண்டுள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். மேலும் அவருடைய பேச்சு மிக அருமையாக இருந்தது’ என்று பேசியிருந்தார்.

    காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை மிகவும் பாராட்டி பேசியிருந்தார். அவருடைய பேச்சு அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    seeman, சீமான்
    சீமான் (கோப்புப் படம்)


    ரஜினியின் கருத்து குறித்து பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ‘மோடியையும், அமித்ஷாவையும் மகாபாரதத்தில் இருந்து கிருஷ்ணன், அர்ஜூன்னுக்கு உவமையாக ரஜினி கூறியதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. ரஜினிகாந்திடமிருந்து மத்திய அரசுக்கு எதிரான கருத்துகளை எதிர்பார்க்க முடியாது. எனவே, ரஜினி கருத்தில் எந்த ஆட்சேபனையும் இல்லை’ என்று தெரிவித்தார்.

    ரஜினி கருத்து குறித்து பேசிய சீமான், ‘கிருஷ்ண பரமாத்மாவும், சரி அர்ஜூனனும் சரி. போர் யார் மீது என்பதுதான் கேள்வி. நீங்கள் அவதாரங்களாக அப்புறம் இருக்கங்கள். முதலில் நல்ல மனிதர்களாக இருங்கள்’ என்று தெரிவித்தார்.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: