விஜய்க்கு எப்போதும் துணை நிற்பேன்! பிகில் சிறப்புக் காட்சி விவகாரத்தில் ஆதரவுக் குரல் எழுப்பும் சீமான்

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியதற்கு வன்மம் வைத்துக் கொண்டுதான் தமிழக அரசு விஜயைப் பழிவாங்குகிறது.

விஜய்க்கு எப்போதும் துணை நிற்பேன்! பிகில் சிறப்புக் காட்சி விவகாரத்தில் ஆதரவுக் குரல் எழுப்பும் சீமான்
சீமான், விஜய்
  • News18
  • Last Updated: October 24, 2019, 10:42 AM IST
  • Share this:
விஜய்க்கு இப்போது மட்டுமல்ல, எப்போதும் துணையாக இருப்பேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் பிகில் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை வெளியாகவுள்ளது. இந்தநிலையில், பிகில் உள்ளிட்ட எந்தப் படங்களுக்கும் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி இல்லை என்று செய்தி மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் இந்த அறிவிப்பு பிகில் தயாரிப்பு நிறுவனத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியதற்கு வன்மம் வைத்துக் கொண்டுதான் தமிழக அரசு விஜயைப் பழிவாங்குகிறது. விஜய் பேசிய கருத்துக்கு எதிர் கருத்துகளை பலரும் தெரிவித்துவிட்டனர். அதன்பின்னரும் பழிவாங்கும் நோக்கத்தோடு படத்துக்கு இடையூறு செய்தால் நன்றாக இருக்காது. அரசின் செயலால், இளம் தலைமுறையினருக்கு ஜனநாயகத்தின் மீது வெறுப்பு உண்டாகும்.


செல்வாக்கு பெற்ற கலைஞர்கள் சொல்வது சமூகத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதனால், அதிகாரத்தினர், அவர்களுக்கு எதிராக வினையாற்றுகின்றனர். அச்சுறுத்தப் பார்க்கின்றனர். விஜய், இந்தச் செயலுக்கெல்லாம் அஞ்சக்கூடாது. விஜய்க்கு இன்றைக்கு மட்டுமல்ல, என்றைக்கும் துணை நிற்பேன்’ என்று தெரிவித்தார்.

Also see:

First published: October 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading