• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ’திருமாவளவன் இல்லாத ஒன்றைச் சொல்லவில்லை. எதிர்க்கிறார்கள் என அவர் பின் வாங்கப்போவதுமில்லை’ - சீமான்

’திருமாவளவன் இல்லாத ஒன்றைச் சொல்லவில்லை. எதிர்க்கிறார்கள் என அவர் பின் வாங்கப்போவதுமில்லை’ - சீமான்

சீமான்

சீமான்

தற்சார்பு விவசாயத்தை கேலி செய்தவர்கள் இப்போது அண்ணாமலையை வைத்து அதையே செய்கிறார்கள்.முருகன் தமிழ்க்கடவுள். ஓட்டுக்காக அவரை சேர்க்கிறார்கள் என பாஜகவை விமர்சித்தார்.

  • Share this:
’இல்லாததை திருமாவளவன் சொல்லவில்லை. அவர்கள் எதிர்க்கிறார்கள் என திருமா பின் வாங்கப்போவதில்லை. அவர் விட்டாலும் நாங்கள் விடப்போவதில்லை’ என மனுஸ்மிரிதி விவகாரத்தில் திருமாவளவன் எம்.பிக்கு எதிரான பாஜகவினரின் போராட்டத்தைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.

சுதந்திர போராட்ட  வீரர்களான மருதுசகோதரர்கள் 219-ஆவது நினைவு தினம் நாம் தமிழர் கட்சியினரால் அனுசரிக்கப்பட்டது. அப்போது பேசிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படத்தை இலங்கை மொழியில் எடுத்துக் கொள்ளுங்கள் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் எங்கள் தமிழ் பிள்ளை விஜய் சேதுபதியை வைத்து தமிழில் எடுப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்றார்.



மனுஸ்மிரிதி விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், திருமாவளவன் மனுஸ்மிருதி பெண்களை இழிவா பேசியிருக்குனு சொல்றார். அதை திரித்து சொல்கின்றனர். இல்லாததை அவர் பேசவில்லை. கருத்தில் இருந்து அவர் பின்வாங்கப்போவதுமில்லை என்றார். உண்மையில் திருமா பெண்கள் மீதான அக்கறையில் பேசினார் என்றார்.

தற்சார்பு விவசாயத்தை கேலி செய்தவர்கள் இப்போது அண்ணாமலையை வைத்து அதையே செய்கிறார்கள்.முருகன் தமிழ்க்கடவுள். ஓட்டுக்காக அவரை சேர்க்கிறார்கள் என பாஜகவை விமர்சித்தார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Gunavathy
First published: