Home /News /tamil-nadu /

சென்னையில் திடீரென சீமான் மயங்கி விழுந்ததால் பரபரப்பு!

சென்னையில் திடீரென சீமான் மயங்கி விழுந்ததால் பரபரப்பு!

சீமான்

சீமான்

வீடுகளை இடிப்பதற்காக இன்று ரயில்வே துறையினர் சார்பாக ஜேசிபி இயந்திரங்களை கொண்டு வந்ததால் அப்பகுதியில் மேலும் பரபரப்பு நிலவியது.

    திருவொற்றியூரில் ரயில்வே கேட் அருகில் 2வது நாளாக தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்களிடம் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் பேச்சுவார்த்தை நடத்திய போது, திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    சென்னை திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகளுக்காக ரயில்வே துறைக்கு சொந்தமான நிலங்களை கையகப்படுத்துவதற்கு ரயில்வே துறையினர் அப்பகுதியில் உள்ள வீடுகளை அகற்றுவதற்காக ஜேசிபி எந்திரங்களை கொண்டு வந்ததால் பொதுமக்கள் வீடுகளை இடிக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறி ஜேசிபி எந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இடிக்கப்படும் வீடுகளுக்கு மாற்று இடம் வழங்க வேண்டுமென்றும் அல்லது தமிழக அரசால் மாற்று இடம் வழங்குவதற்கு உறுதி அளித்தால் மட்டுமே தற்போது உள்ள வீடுகளை அகற்றுவதற்கு அனுமதி அளிப்போம் என்று கூறி பொதுமக்கள் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    Must Read : மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில்‌ சொத்து வரி விகிதங்கள் 25% முதல் 150% வரை உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு

    மேலும் நேற்று திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதேபோன்று டெல்லி சென்று இருக்கும் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் வீடுகள் இடிக்கக்கூடிய மக்களுக்கு மாற்று இடம் வழங்கும் வரை வீடுகள் இடிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் நேரில் சென்று மனு கொடுத்திருந்தார்.



    இந்நிலையில் மீண்டும் வீடுகளை இடிப்பதற்காக இன்று ரயில்வே துறையினர் சார்பாக ஜேசிபி இயந்திரங்களை கொண்டு வந்ததால் அப்பகுதியில் மேலும் பரபரப்பு நிலவியது.

    இதனிடையே,  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அப்பகுதி மக்களை சந்தித்து பேசி வந்தார்.  அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து, மயங்கி விழுந்த சீமானுக்கு முதல் உதவி அளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முதலுதவி சிகிச்சைக்கு பிறகு இயல்பான நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து சீமான் வீடு திரும்பினார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Seeman

    அடுத்த செய்தி