கரூர் பாராளுமன்ற தொகுதி பொதுமக்களிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும். சீமான் போன்ற ஆபாச வக்கிர எண்ணம் கொண்ட அரசியல்வாதிகளை தொடர்ந்து தோலுரிக்கும் பணியை செய்வோம் என எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
கரூர் பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “ராஜிவ்காந்தியை முன்னாள் பிரதமர் என்று பாராமல் சீமான் பேசியதற்கு பதில் தெரிவித்திருந்தேன். நடிகை விஜயலக்ஷ்மி ஆதாரத்தோடு சீமான் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். அதையே தான் நான் சீமான் பாலியல் குற்றவாளி என கூறினேன். ஆனால், தனிப்பட்ட முறையில் என்னை வக்கிர புத்தியுடன் தாக்கும் நோக்கத்தோடு பேசுகிறார்.
அவர் பாலியல் குற்றவாளி இல்லை என நேர்மையானவராக இருந்தால் நீதிமன்றத்தை நாடி மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருக்கலாம். பெண்கள் மீது ஆபாச தாக்குதல், அவதூறு பரப்பினால் என்னை போன்ற பெண்களை அரசியலை விட்டு விரட்டலாம் என்று சீமான் போன்றவர்கள் நினைக்கிறார்கள்.
இந்த மாதிரியான தாக்குதல்கள் எனக்கு புதிதல்ல, பாரதிய ஜனதா கட்சியிலும் எனக்கு தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பாஜகவின் பி டீம் சீமான் தான். கரூர் நாடாளுமன்ற தொகுதி மக்கள் மானங்கெட்டு ஜோதிமணிக்கு வாக்களித்ததாக பேசிய சீமான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். கரூர் மக்களை பற்றி பேச சீமானுக்கு அருகதை இல்லை. கருத்து முரண்பாடு காரணமாக, நாம் தமிழர் கட்சியில் உள்ள உறுப்பினர்கள், சீமான் போன்ற ஆபாச வக்கிர அரசியல்வாதிகளை பின்பற்றி, தவறான பாதைக்கு சென்று விடக்கூடாது. எனவே, சீமான் போன்ற நபர்களை தொடர்ந்து தோலுரிக்கும் பணியை செய்வோம் என்று தெரிவித்தார்.
செய்தியாளர் : தி.கார்த்திகேயன் (கரூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Congress, Jothimani, Karur, Naam Tamilar katchi, Seeman