அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி (63). கடந்து ஒரு வாரம் வயிறு உபாதை காரணமாக பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார், இன்று காலை சிகிச்சையின் போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
ஓ.பன்னீர்செல்வம் மனைவி இறந்த தகவல் அறிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றனர்.
பெருங்குடியில் தனியார் மருத்துவமனைக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமிக்கு அஞ்சலி செலுத்தினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆறுதல் கூறினார். மேலும் முதல்வர் ஸ்டாலின் உடன் அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்ரமணியன் ஆகியோரும் வருகை தந்தனர். அதேபோல, சசிகலாவும் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி துணைத்தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் துணைவியார் அம்மையார் விஜயலட்சுமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து நேரில் சென்று ஐயாவுக்கும் குடும்பத்தினருக்கும் ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கேற்றேன். pic.twitter.com/Pma4q8MD1S
— சீமான் (@SeemanOfficial) September 1, 2021
இந்தநிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் ஓ.பன்னீர் செல்வத்தையும், அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதுதொடர்பான அவருடைய ட்விட்டர் பதிவில், ‘முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி துணைத்தலைவரும், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் துணைவியார் அம்மையார் விஜயலட்சுமி மறைவெய்திய செய்தியறிந்து நேரில் சென்று ஐயாவுக்கும் குடும்பத்தினருக்கும் ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கேற்றேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: O Panneerselvam