Home /News /tamil-nadu /

'ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் தான் கொன்றார்கள் என நான் பேசவில்லை' - சீமான் விளக்கம்

'ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் தான் கொன்றார்கள் என நான் பேசவில்லை' - சீமான் விளக்கம்

சீமான்

சீமான்

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த சீமான் தமிழ்நாட்டோட சட்டம் ஒழுங்கு  ஒரு நாளைக்கு ஒருவர் சாலையோரம் வெட்டி படுகொலை செய்யும் நிலைமையில் உள்ளது  என்று தெரிவித்தார். 

ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் தான் கொன்றார்கள் என நான் பேசவில்லை.  நாங்கள் கொல்லவில்லை என்று தொடர்ந்து கூறிய போது கண்டு கொள்ளாதவர்கள் நாங்கள் தான் கொன்றோம் என்று கூறியதும் அதை கவனித்தார்கள். அவர்கள் கவனிக்கவே அப்படி கூறினேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான ராவணன் குடியில் நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப்  போராட்டத்தில் உயிர் இறந்தவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி உயிர் இழந்தவர்களின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்கள்

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசிய போது, ’தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது வாகனத்தில் ஏறி நின்று துப்பாக்கியால் குறி பார்த்து சுடுவதற்கு  யார் அனுமதி கொடுத்தது என்றும் இதை பற்றி முன்னாள் முதல்வரிடம் கேட்கும் பொழுது அதை பற்றி தெரியாது. நானே தொலைக்காட்சியில் பார்த்ததுதான் தெரிந்து கொண்டேன் என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் இறந்தவர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்கு கூட  தூத்துக்குடியில் அனுமதி கிடைக்கவில்லை. அவர்கள் உயர் தியாகம் செய்ததை வீணாகாமல்,  அந்த ஆலை மீண்டும் திறக்காமல் இருக்க நாங்கள் போராடுவோம் என்றும் கூறினார்.

மேலும் பெட்ரோல், டீசல் வரி குறைப்பு என்பது எப்போது குறைத்து இருக்க வேண்டும் என கேள்வி கேள்வி எழுப்பிய அவர் உங்களால் குறைக்க முடியும் என்றால் முன்பே செய்து இருக்க வேண்டும். பல போராட்டத்திற்கு பிறகு குறைத்து உள்ளார்கள் என்றும் தெரிவித்தார். மேலும் மாநில அரசு தானாகவே பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியைக் குறைக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் தான் கொன்றார்கள் என நான் பேசவில்லை என்றும் நாங்கள் கொல்லவில்லை என்று தொடர்ந்து கூறியபோது கண்டு கொள்ளாதவர்கள் நாங்கள்தான் கொன்றோம் என்று கூறியதும் அதை கவனித்தார்கள். அவர்கள் கவனிக்கவே அப்படி கூறினேன் என அவர் தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சி இந்த நாட்டில் அரசியல் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் எங்களை படிக்க வைத்தது தாத்தா காமராஜர். ஆனால் எங்களை குடிக்க வைத்தது காங்கிரஸ் என்று குற்றம் சாட்டிய  அவர் அதிகம் கல்வி பெற்ற மாநிலம் கேரளா தான்.

அதில் எங்கே திராவிட ஆட்சி உள்ளது எனவும் கேள்வி எழுப்பினார். மேலும் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த சீமான் தமிழ்நாட்டோட சட்டம் ஒழுங்கு  ஒரு நாளைக்கு ஒருவர் சாலையோரம் வெட்டி படுகொலை செய்யும் நிலைமையில் உள்ளது என்று தெரிவித்தார்.

நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை திமுகவின் அமைச்சர்கள் முதல் மாமன்ற உறுப்பினர்கள் வரை அனைவரும் பார்க்க வேண்டும். பார்த்து விட்டு பிரமாதம் என்று டிவிட்டர் பதிவு செய்ய வேண்டும். எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி 7 பேர்  விடுதலைக்கு எடுத்து வச்ச ஒரு  நடவடிக்கை காமிக்க முடியுமா? என கேள்வி எழுப்பினார்.

திமுக 2 நாள் கூட அவர்கள் கோட்பாட்டில் உறுதியாக இல்லை என்றும் பல்லக்கில் தூக்கிச் செல்லக் கூடாது என்பதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. மிஷின் வைத்து தூக்கி செல்லுங்கள். விரும்பித்தான் பல்லக்கு தூக்குகிறோம் என்று கூறியதால் விட்டு விட்டு விட்டார்கள். விரும்பித்தான் கற்பழிக்கிறேன் என்று கூறினால் விட்டு விடுவீர்களா என கேள்வி எழுப்பினார்.

மேலும் அண்ணாமலை மற்றும் அழகிரியை என்னிடம் விவாதத்திற்கு வர சொல்லுங்கள். இதற்காக தான் பாஜக தமிழ் நாட்டுக்கு தேவை. இதற்காக தான் காங்கிரஸ் தமிழ் நாட்டுக்கு தேவை என்று சொல்ல சொல்லுங்கள் என்றும் காங்கிரஸ் கட்சியும் பாரதிய ஜனதா கட்சியும் தமிழகத்திற்கு எதற்கு என்று கேள்வி எழுப்பினார்.

என் மொத்த இனத்தையும் கொன்று குவித்தது ராஜிவ் காந்தியின் காங்கிரஸ் ஆட்சி தான். ராஜிவ் காந்தி ஒருவரின் மரணத்திற்கு என் மொத்த இனத்தின் மரணத்தை ஈடாக பேசுவது எப்படி என்றும் 31 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளன் தியாகி தான் என்றும் சீமான் தெரிவித்தார்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Seeman

அடுத்த செய்தி