பாஜகவிடம் இருந்து இந்தியாவை காப்பாற்ற வேண்டும்- சீமான்

news18
Updated: February 13, 2018, 3:48 PM IST
பாஜகவிடம் இருந்து இந்தியாவை காப்பாற்ற வேண்டும்- சீமான்
சீமான்
news18
Updated: February 13, 2018, 3:48 PM IST
இந்தியாவையே பாஜகவிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சென்னையில் சீமான் செய்தியாளர்களிடன் பேசியதாவது:

பாரதிய ஜனதா கட்சியினர் அவர்கள் வீட்டிலேயே குண்டு வைத்து விட்டு எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கூறுபவர்கள். இந்திய நாட்டையே பாஜகவிடம் இருந்து நாம் தான் காப்பாற்ற வேண்டும்.

சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருவப்படத்தை திறந்ததில் எந்த தவறும் இல்லை. உருவ படத்தை திறந்தது தவறு என்று சொன்னால் யாருடைய படத்தையும் திறக்க முடியாது.

மீனாட்சி அம்மன் கோவிலில் மின் கசிவு தொடர்ச்சியாக இருந்து இருக்கிறது. அதை மின் வாரிய துறை சரி செய்ய போகும் போது நிர்வாகம் அதை அனுமதிக்கவில்லை. கோவிலை அறநிலையத்துறையில் இருந்து எடுக்க வேண்டும் என்பதற்கான திட்டம் தான் இந்த கோவில் எரிந்தது. பாதுகாப்பிற்காக கடைகளை கோவிலில் இருந்து 100 அடி தூரம் தள்ளி வைத்தால் போதும். அதற்காக கடைகளை மூட வேண்டும் என்று கூறுவது தவறு.

இனப்படுகொலை பற்றியும், கச்சத்தீவு மீட்பு குறித்தும் பாஜகவின் நிலைபாடு என்பது அவர்கள் எதிர்க் கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு ஆளும் கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு என்று மாறி மாறி பேசி வருகின்றனர்.

உயர் நீதிமன்றத்தில் என் தாய் மொழியில் வழக்காட  கூடிய உரிமையை பெற்று தராத நிலையில், பாஜகவினர் தான்  தமிழகத்தை காப்பாற்ற முடியும் என்று  தமிழிசை சொல்கிறார்.
Loading...
இவ்வாறு சீமான் கூறினார்.
First published: February 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்