• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • உள்ளாட்சி தேர்தல் : காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் சீமான்

உள்ளாட்சி தேர்தல் : காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் சீமான்

சீமான்

சீமான்

அடுத்த மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

  • Share this:
    தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளார்.

    இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு சுரேஷ்குமார் (வார்டு-3), ராயப்பன் (4), தனலட்சுமி (5), பவானி (6), ஜான்சிராணி (7), கவிமணி (8), வில்லியம்ஸ் (10), காஞ்சிபுரம் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு பாலமுருகன் (6).

    செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு ஜாபர் அலி (1), மணிவண்ணன் (2), செல்சந்திரன் (3), நிதா செல்வா (4), சுகுமார் (6), சசிகுமார் (7), உஷாராணி (8), பவானி (11), சுகுமாரியம்மன் (13), வேல்முருகன் (14), நந்தினி (15), ஆனந்தி (17), கோவிந்தராஜ் (18), சந்திரமோகன் (19), லலிதா (21), சதீஷ் (22).

    திருக்கழுக்குன்றம் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு தினேஷ் (2), அங்கம்மாள் (3), அன்பரசன் (5), ராஜா (6), நேதாஜி (7), தேவராஜ் (8), பூங்காவனம் (10), வினிதா (11), வெங்கடேசன் (13), அனிதா (20). இதேபோல், வேலூர், விழுப்புரம் மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய பதவிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கூறியுள்ளார்.

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்குட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், அடுத்த மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.

    Must Read : திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை - அமைச்சர் கே.என்.நேரு

    மொத்தம் 27 ஆயிரத்து 3 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: