வளர்ச்சியைத் தடுக்கவே வாக்கு எந்திரத்தில் சின்னத்தை மங்கலாக்கி விட்டனர் - சீமான் ஆவேசம்

“துரைமுருகன் வீட்டில் மட்டும் தான் பணம் இருக்கிறதா? வேறு எங்குமே பணம் இல்லையா? மற்றவர்கள் எல்லாம் நேர்மையாக தேர்தலை சந்திக்கிறார்களா? ”

news18
Updated: April 16, 2019, 4:53 PM IST
வளர்ச்சியைத் தடுக்கவே வாக்கு எந்திரத்தில் சின்னத்தை மங்கலாக்கி விட்டனர் - சீமான் ஆவேசம்
சீமான்
news18
Updated: April 16, 2019, 4:53 PM IST
வாக்குப்பதிவு இயந்திரங்களில் நாம் தமிழர் கட்சியின் சின்னம் தெளிவாக இல்லை என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

2019-ம் ஆண்டின் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. கடந்த தேர்தலில் மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்ட அக்கட்சிக்கு இந்தமுறை கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் தங்களது சின்னம் தெளிவற்ற முறையில் மங்கலாக தெரிவதாக உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி வழக்கு தொடுத்தது. ஆனால் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றமும் அவசர வழக்காக எடுத்து விசாரிக்க மறுத்துள்ளது.

இந்நிலையில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், “வாக்குப்பதிவு இயந்திரங்களில் எங்களது சின்னம் தெளிவாக இல்லை. எங்களது வளர்ச்சியைத் தடுக்கவே சின்னத்தை மங்கலாக்கி விட்டனர்.

எங்களது சின்னத்தை மட்டும் தெளிவற்ற முறையில் வைக்க காரணம் என்ன?தாங்கள் பெரிய கட்சியாக உருவாகிவிடக் கூடாது என்பதால் இவ்வாறு செய்கிறார்கள். தேர்தல் ஆணையம் திட்டமிட்டே இவ்வாறு செய்கிறது.தரகர்களை தேர்வு செய்யத்தான் தேர்தல் அமைப்பு இருக்கிறதே தவிர, தலைமைகளை தேர்வு செய்வதற்கில்லை. இங்கே தேர்தல் ஆணையமே ஒரு ஏமாற்று வேலைதானே.

வாக்குக்கு பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையம் ஏன் தடுக்கவில்லை. பணப்பட்டுவாடா செய்து சிறைக்கு சென்றது எத்தனைபேர்? அதற்காக எடுக்கப்பட்ட கைது நடவடிக்கை என்ன?. இங்கே சோதனை என்ற பெயரில் வணிகர்கள் துன்புறுத்தப்படுகின்றனர்” என்றார்.

மேலும் துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற ரெய்டு குறித்து பேசிய சீமான், “துரைமுருகன் வீட்டில் மட்டும் தான் பணம் இருக்கிறதா? வேறு எங்குமே பணம் இல்லையா? மற்றவர்கள் எல்லாம் நேர்மையாக தேர்தலை சந்திக்கிறார்களா? தேர்தல் ஆணையம் பணப்பட்டுவாடாவை தடுக்கவில்லை” என்றார்.

அரசியல் ஆரம்பம் | கமல்ஹாசன் பாஜகவின் ‘பி டீமா’?


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...