• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 'சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விடக்கூடாது; பள்ளி மீது நடவடிக்கை தேவை;' : சீமான்

'சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விடக்கூடாது; பள்ளி மீது நடவடிக்கை தேவை;' : சீமான்

சீமான்

சீமான்

இனி எவருக்கும் இத்தகைய எண்ணமே எழாதவாறு தடுக்கும் வகையில் மிகக் கடுமையான தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

  • Share this:
    கோவையில் பள்ளி மாணவி தற்கொலைக்குக் காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீதும், கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்  மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

    கோவை  சேர்ந்த 17 வயது மாணவி,  தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி செல்ல விரும்பவில்லை எனக்கூறி மாற்றுச்சான்றிதழ் பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதன்பின்னர் அந்த மாணவியை பெற்றோர்கள் வேறு பள்ளியில் சேர்த்து விட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் தனியாக இருந்த மாணவி, அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பாக அவர் எழுதி வைத்த கடிதம் நாட்டையே உலுக்கி வருகிறது.

    அதாவது தனியார் பள்ளியில் படித்தபோது, அவருக்கு இயற்பியல் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. வேறு பள்ளிக்கு மாறியும்,  தொந்தரவு செய்ததால் மாணவி மனம் உடைந்து போனதாக தெரிகிறது. தனது கடிதத்தில் மாணவி, மூவரை குறிப்பிட்டுள்ளார். அவரின் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வரும் நிலையில், ஆசிரியரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

    கோவையை சேர்ந்த  12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளி ஆசிரியர் கொடுத்தப் பாலியல் தொந்தரவினால் தற்கொலை செய்து கொண்ட செய்தியறிந்து நெஞ்சம் பதைபதைத்துப் போனேன். அண்மைக்காலமாக வெளிப்பட்டு வரும் கல்விக்கூடங்களில் நடைபெற்று வரும் பாலியல் கொடுமைகள் தொடர்பான செய்திகள் பெண் பிள்ளைகளின் நல்வாழ்வு, அவர்களது சமூகப் பாதுகாப்பு குறித்த பெருங்கவலையை ஏற்படுத்துகின்றன.

    மாணவியின் தற்கொலைக்குக் காரணமான  பள்ளி ஆசிரியர்  கைது செய்யப்பட்டது சற்றே ஆறுதலைத் தந்தாலும், அக்கொடுங்கோலனைச் சட்டத்தின் பிடியிலிருந்தும், தண்டனையிலிருந்தும் தப்பிக்கவிடாது, இனி எவருக்கும் இத்தகைய எண்ணமே எழாதவாறு தடுக்கும் வகையில் மிகக் கடுமையான தண்டனை உறுதி செய்ய வேண்டுமெனவும், மாணவியின் மீதே பழிசுமத்தி அப்பிஞ்சை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, இளந்தளிர் கருகுவதற்கு காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Abdul Mushtak
    First published: