ஆண்டு வருமானத்தை தவறாக குறிப்பிட்ட சீமான்: மீண்டும் வேட்புமனு தாக்கல்?

சீமான்

சீமானின் ஆண்டு வருமானமாக ரூ.1,000 மட்டுமே என குறிப்பிடப்பட்டிருந்தது.

 • Share this:
  நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்ணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த வேட்புமனுவில் ஆண்டு வருமானம் தவறாகக் குறிப்பிடப் பட்டதாகவும், இதனால் அவர் மீண்டும் வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

  தமிழக சட்டமன்ற தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக,  சீமான் போட்டியிடுகிறார். இந்நிலையில், அவர் 15 ஆம் தேதி திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

  வேட்புமனுவில், சீமான் அளித்த உறுதிமொழி பத்திரத்தில் ஆண்டு வருமானமாக ரூ.1,000 மட்டுமே இருந்து வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

  Must Read : பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்: சிவகங்கையில் இதுவரை ரூ. 4.41 லட்சம் வசூல்

   

  இந்நிலையில், ‘சீமானின் ஆண்டு வருமானம் 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் எனவும், ரூ.1,000 என்பது அவர் வருமான வரி கட்டிய தொகை என்பதும், எழுத்துப் பிழையாக தாக்கல் செய்யப்பட்டதால், அதை சரி செய்யும் விதமாக மீண்டும் சீமான் வேட்பு மனுவை தாக்கல் செய்வார்’ என்றும் நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
  Published by:Suresh V
  First published: