இது தேர்தல் பொங்கலாக இருக்கும் - ரூ.2,500 வழங்கும் அறிவிப்பை விமர்சிக்கும் சீமான்

இது தேர்தல் பொங்கலாக இருக்கும் - ரூ.2,500 வழங்கும் அறிவிப்பை விமர்சிக்கும் சீமான்

சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி.

2,500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்க உள்ளதற்கு 'இது தேர்தல் பொங்கலாக இருக்கும்' என நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

  • Share this:
புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக பதாகளை ஏந்தி இருந்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "விவசாயிகள் பேரெழுச்சியாக போராடி வருகின்றனர். பஞ்சாப், ஹரியானாவைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி போராடி வருகிறது.

அத்தியாவசிய பொருட்களாக இருக்கும் தக்காளி, வெங்காய், உருளைக்கிழங்கு பொருட்களையே பதுக்குகிறார்கள். அத்தியாவசியப் பொருட்கள் இல்லை என்று சொல்லி விட்டால் எவ்வளவு பதுக்குவார்கள். இச்சட்டம் இதற்கு தான் வழிவகுக்கும். இங்கு எடப்பாடியோ, மோடியோ இந்த சட்டத்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகளை விளக்க வேண்டியது தானே? எதிர்க்கின்ற வகையிலே அனைத்துச் சட்டங்களையும் கொண்டு வந்தால் எதிர்க்காமல் என்ன செய்வது? புடுங்குவது எல்லாமே தேவையில்லாத ஆணிதான்.

மம்தா பானர்ஜி போல உறுதியாக இந்தச் சட்டத்தை எதிர்க்க வேண்டும். எடப்பாடியாவது அமைச்சர் ஆவதற்கு முன்பு விவசாயம் பார்த்துக் கொண்டிருந்தார். மு.க.ஸ்டாலின் எந்தவகையில் விவசாயி? பதநீருக்கு சர்க்கரை போட்டீர்களா என்று கேட்பவர் விவசாயியா? தேசம் தான் எங்களுக்கு எதிராக இருக்கிறது. நாங்கள் தேசத்துக்கு எதிராக இல்லை. 2,500 ரூபாய் பொங்கல் பரிசாக அரசு வழங்க உள்ளது என்ற கேள்விக்கு, தேர்தல் பொங்கலாக இருக்கும் என்றார். கொரனோவை விட கொடிய வைரஸ் நாட்டை ஆள்கிறது. பெரும்போராட்டத்தை தள்ளி விட வசதியாக கொரனோவைக் காரணம் காட்டி குளிர்கால கூட்டத் தொடரை ரத்து செய்து விட்டார்கள். ரஜினி அரசியல் செய்ய மாட்டார். நேரடியாக தேர்தலுக்குத்தான் வருவார்" என்றார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: