60 நாளில் ஆங்கிலம் கற்பது போல கட்சி தொடங்குகிறார் - ரஜினிகாந்தை கடுமையாக விமர்சிக்கும் சீமான்

60 நாளில் ஆங்கிலம் கற்பது போல கட்சி தொடங்குகிறார் - ரஜினிகாந்தை கடுமையாக விமர்சிக்கும் சீமான்

சீமான் ரஜினிகாந்த்

60 நாளில் ஆங்கிலம் கற்பது எப்படி என்பது போல ரஜினிகாந்தின் கட்சி தொடக்க அறிவிப்பு உள்ளது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.

 • Share this:
  அம்பேத்கரின் 64ம் நினைவு நாளான இன்று அவரது உருவப்படத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கட்சி அலுவலகத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ஜெயலலிதா, கருணாநிதி இருக்கும் போதே நான், விஜய்காந்த் ஆகியோர் கட்சி தொடங்கினோம். ரஜினிகாந்த், ஒரு அழுத்தம் காரணமாக கட்சி தொடங்குவதாக அறிவிதிருக்கிறார் என நான் உறுதியாக நினைக்கிறேன். கூட இருந்து யாரோ ரஜினி காந்தைத் தூண்டிவிடுகிறார்கள். மொத்தமாவே மக்களை அறிவு கெட்ட கூட்டம் என நினைக்கிறார்.

  ரஜினியின் தேவை எங்கு உள்ளது? 60 நாளில் ஆங்கிலம் கற்பது எப்படி என்பது போல அவரது கட்சி தொடக்க அறிவிப்பு உள்ளது. கட்சி ஆரம்பிப்பது என முடிவு செய்திட்டீங்க. நாங்கள் மோதுவது என்று முடிவு செய்து விட்டோம்.

  உங்கள் ரசிகர் மன்றத்தில் இத்தனை ஆண்டுகளாக இருந்த ஒருவ கூடவா உங்களுக்கு ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்க முடியவில்லை. ஒருவர் பா.ஜ.ககாரர், ஒருவர் காங்கிரஸ்காரர் எப்படி மாற்றம் கொண்டு வருவீர்?’ என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: