• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழ்நாடு நாளை ஜூலை 18-ம் தேதியாக அறிவித்தது தேவையற்ற குழப்பம் - சீமான் காட்டம்

தமிழ்நாடு நாளை ஜூலை 18-ம் தேதியாக அறிவித்தது தேவையற்ற குழப்பம் - சீமான் காட்டம்

சீமான்

சீமான்

தமிழ்நாடு நாளாக ஜூலை 18-ம் தேதியை அறிவித்திருப்பது தேவையற்ற குழப்பம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘தமிழர்கள் நாங்கள் தமிழ்நாடு நாளாக தொடர்ச்சியாக நவம்பர் 1-ம் தேதியைக் கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டு சேலத்தில் கொண்டாடுகிறோம். 1956-ல் தமிழ்நாடு மாநிலமாக பிரிக்கப்பட்ட நாள் நவ 1. தமிழ்நாடு என்று பெயர் அறிவிக்கப்பட்ட நாள் ஜூலை 18. தமிழக அரசு ஜூலை 18 தமிழ்நாடு நாளாக அறிவித்தது அவசியமற்ற குழப்பம்.

    ஜூலை 18 தமிழ்நாடு நாளாக அறிவித்தது குழந்தை பிறந்த தேதியைப் பிறந்தநாளாக கொண்டாடாமல் குழந்தைக்கு பெயர் வைத்த நாளை பிறந்த நாளாக கொண்டாடுவது போல் உள்ளது. குழப்பத்தை ஏற்படுத்தவதற்காக இந்த அறிவிப்பு. வரலாற்றை திரிக்கும் முயற்சியை திராவிடக் கட்சிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்த பிறகு இட ஒதுக்கீடு ரத்து என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது எங்களை பொறுத்தவரை பெரிய ஏமாற்றம். தேர்தலுக்காக அதிமுக அரசு சட்ட வல்லுனர்களை ஆலோசிக்காமல் அறிவித்ததே இந்த ஒதுக்கீடு. சரியாக மொழி வாரியாக கணக்கெடுக்க வேண்டும். ஜாதிவாரியாக எண்ணிக்கைக் கேற்ப இட ஒதுக்கீட்டை சரியாக பிரித்து தர வேண்டும்’ என்று தெரிவித்தார்.

    திரிபுராவில் இஸ்லாமியர்கள் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து இது போன்ற சம்பவங்கள் திட்டமிட்டு நடைபெற்று வருகிறது. பொதுச் சொத்துக்களை தொடர்ந்து தனியார் மயமாக்கி வருவதன் காரணமாக இந்தியா என்பது வருங்காலங்களில் பெயரளவில் மட்டுமே இருக்கும். 100 ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாட இந்தியா இருக்காது. முன்னாள் அமைச்சர்கள், அ.தி.மு.க நிர்வாகிகள் வீடு மற்றும் அலுவலகங்களில் தொடர் சோதனை என்பது பேரம் பேசும் செயல்’ என்று விமர்சித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: