ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கோவை சிலிண்டர் வெடிப்பு வழக்கை NIA-வுக்கு மாற்றியது தவறு - சீமான் கண்டனம்

கோவை சிலிண்டர் வெடிப்பு வழக்கை NIA-வுக்கு மாற்றியது தவறு - சீமான் கண்டனம்

சீமான் - முதல்வர் ஸ்டாலின்

சீமான் - முதல்வர் ஸ்டாலின்

NIAவிற்கு மாற்றுவதால், முதல்வர் தனது இயலாமையை ஏற்றுக்கொள்கிறாரா? அல்லது தமிழக காவல்துறையிடமுள்ள நம்பிக்கையை இழந்துவிட்டாரா ? என கேள்வி எழுப்பியுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கோவை சிலிண்டர் வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்தது மிகத்தவறான முடிவு என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

  சீமான வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய புலனாய்வு முகமையானது பாஜகவின் கிளை பிரிவு போல செயல்பட்டு, இசுலாமிய மக்களை குறிவைத்து குற்றச்சாட்டுகள் வைக்கப்படும் நிலையில், மாநில சுயாட்சியை முழங்குகிற திமுக, இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றியிருப்பது ஏற்கத்தக்கதல்ல என்று கூறியிருக்கிறார்.

  மேலும், வன்முறையில் ஈடுபடுபவர்கள் சாதி, மத பேதமின்றி தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த வித மாற்றுக்கருத்தும் இல்லை.., ஆனால் இந்த வழக்கில் சம்பத்தப்பட்டவர்கள் இஸ்லாமியர்கள் என்பதாலேயே அந்த சமூகத்தினரை குற்றவாளியாக சித்தரிப்பது ஏற்புடையதல்ல என்று தெரிவித்திருக்கிறார்.

  இதையும் படிக்க : மதுஅருந்திவிட்டு பணிக்கு வந்தால் கடும் நடவடிக்கை.. போக்குவரத்து பணியாளர்களுக்கு எச்சரிக்கை..

  இந்த வழக்கு நிறைவடைவதற்கு முன்பாகவே, இந்த வழக்கிற்கு முழு ஒத்துழைப்பு தரும் இஸ்லாமியர்களை குற்றநோக்கத்தோடு பார்ப்பது கடும் கண்டனத்திற்குரியது என கூறியுள்ள அவர், காவல்துறை விசாரணை நிறைவடைவதற்கு முன்பாகவே. இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றியது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

  இந்த வழக்கில் பன்னாட்டு தொடர்பு இருக்ககூடும் என சொல்லும் திமுக அரசு, வழக்கு விசாரணை முடிவிற்கு வரும் முன்னர் அத்தகைய முடிவிற்கு எப்படி வந்தது? துப்பறிந்து விசாரணை செய்வதில் பெயர்பெற்ற தமிழக காவல்துறையிடமுள்ள வழக்கை NIAவிற்கு மாற்றுவதால், முதல்வர் தனது இயலாமையை ஏற்றுக்கொள்கிறாரா? அல்லது தமிழக காவல்துறையிடமுள்ள நம்பிக்கையை இழந்துவிட்டாரா ? என கேள்வி எழுப்பியுள்ளார்.

  மேலும், மாநில காவல்துறையினருக்கு மதசாயம் பூசும் பாஜகவின் கூற்றை ஏற்று தான் வழக்கை கைமாற்றி விடுகிறதா மாநில அரசு? மாநில இறையான்மைக்கு இது எதிரானது இல்லையா?  ஸ்டேன் சுவாமி, வரவர ராவ் போன்ற சமூக செயற்பாட்டாளர்கள் போல அப்பாவி இஸ்லாமியர்களையும் கைது செய்தால் யார் பொறுப்பேற்பது என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தன் பொறுப்பை தட்டிகழித்து NIAவிற்கு கைமாற்றுவது தான் மாநில தன்னாட்சியைக் காட்டுகிற இலட்சணமா முதல்வரே எனவும் தனது அறிக்கை வாயிலாக கேட்டுள்ளார்.

  மேலும் இந்த வழக்கில் குற்றமிழைத்தவர்களை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த கோரிய அவர், இந்த வழக்கை கைமாற்றி விட்டதற்கு தனது கண்டனத்தை பதிவு செய்தது மட்டுமில்லாமல், இந்த நிகழ்வை வைத்து மதப்பூசல்கள் செய்து அரசியல் ஆதாயம் தேடும் மதவாத சக்திகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Bomb blast, Coimbatore, Kovai bomb blast, NIA, Seeman