Home /News /tamil-nadu /

சின்ன பசங்கன்னு தகராறு பண்ணிருக்காங்க... ஒரு வேள அங்க நான் இருந்திருந்தால்..? சீமான் ஆவேசம்

சின்ன பசங்கன்னு தகராறு பண்ணிருக்காங்க... ஒரு வேள அங்க நான் இருந்திருந்தால்..? சீமான் ஆவேசம்

சீமான்

சீமான்

நான் பொறுமையாக இருக்கிறேன். அதற்கும் ஒரு எல்லை உண்டு. என்னை தொடாமல் என்னை சுற்றி இருப்பவர்களை தொட்டு என்னை காயப்படுத்துகின்றனர் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

    தருமபுரி மாவட்டம் ஆரூரில்  நாம் தமிழர் கட்சியின் கூட்டம் நடைபெற்றுகொண்டிருந்த மேடையில் ஏறி திமுகவினர் சிலர் அத்துமீறலில் ஈடுபட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சீமான், தான் அங்கிருந்தால் அவர்களை அடித்திருப்பேன் என்றும் கூறியுள்ளார்.

    தர்மபுரி மாவட்டம், அரூர் தொகுதி, மொரப்பூரில் நேற்று இஸ்லாமிய கைதிகள் மற்றும் ராஜிவ் காந்தி கொலையில் குற்றவாளிகளான 7 பேரை விடுவிக்கக் கோரி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து  நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பேசிய, நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர் , தமிழக முதலமைச்சர் மற்றும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி குறித்து தரக்குறைவாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.

    அப்போது, திமுகவின் மொரப்பூர் ஒன்றிய செயலாளர் செங்கண்ணன் உள்ளிட்டோர் மேடையேறி நாம் தமிழர் கட்சியினருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினர்.  மேடையில் இருந்த மைக் சேதப்படுத்தப்பட்டோது நாம் தமிழர் நிர்வாகி மீது நாற்காலியும் வீசப்பட்டது.

    இன்று காலை சென்னை கொளத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இந்த சம்பவம் தொடர்பாக  கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான், நாங்கள் ஒரு கூட்டம் நடத்துகிறோம். விருப்பம் இருந்தால் கேளுங்கள் இல்லையென்றால் விலகு செல்லுங்கள். மேடையில் ஏறி தகராறு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    இதையும் படிங்க: நாம் தமிழர் மேடையில் திமுகவினர் அத்துமீறல்- சீமான் கண்டனம்


    இது தான் திமுக. திமுக இப்படி தான் செய்யும். சின்ன சின்ன பசங்க இருந்ததால் நீங்கள் தகராறு செய்துவிட்டீர்கள். ஒருவேள மேடையில் நான் இருந்து பேசிக்கொண்டிருந்தால் என்ன நடந்திருக்கும். செருப்பை காட்டியதோடு இல்லாமல் அடித்து வெளுத்திருப்பேன்.

    நான் பொறுமையாக இருக்கிறேன். அதற்கும் ஒரு எல்லை உண்டு. என்னை தொடாமல் என்னை சுற்றி இருப்பவர்களை தொட்டு என்னை காயப்படுத்துகின்றனர்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: DMK, Naam Tamilar katchi, Seeman

    அடுத்த செய்தி