தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி ரஜினியிடம் விசாரணை வேண்டும்! விசாரணை ஆணையத்தில் சீமான் கோரிக்கை

இன்று அந்த விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராகி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கமளித்தார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி ரஜினியிடம் விசாரணை வேண்டும்! விசாரணை ஆணையத்தில் சீமான் கோரிக்கை
இன்று அந்த விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராகி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கமளித்தார்.
  • News18
  • Last Updated: October 16, 2019, 4:30 PM IST
  • Share this:
ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரம் தொடர்பாக ரஜினிகாந்திடம் விசாரணை நடத்தவேண்டும் என்று விசாரணை கமிஷனிடம் தெரிவித்தேன் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018-ம் ஆண்டு அம்மாவட்ட மக்கள் மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர். 20 ஆயிரத்துக்கு அதிகமானோர் திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் செல்லும்போது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரைச் சுட்டுக் கொன்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு சார்பில் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று அந்த விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராகி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கமளித்தார்.


அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ‘ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ரஜினி சமூக விரோதிகள் ஊடுருவியதாக தொிவித்தது தொடர்பாக ரஜினியை விசாரணை செய்ய வேண்டும் என்று தொிவித்தேன்.

அதற்கு விசாரணை ஆணையம் ரஜினிக்கும் அழைப்பானை அனுப்பி விசாரணை செய்வோம் என்று என்னிடம் தெரிவித்துள்ளனர். மக்கள் போராடுவது குற்றம் என்றால், போராட்டம் சூழலை உருவாக்குவது அதைவிட பெரிய குற்றம்’ என்று தெரிவித்தார்.

Also see:
First published: October 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading