ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக விளங்கியவர் - சசிகலாவுக்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து

சீமான், சசிகலா

சசிகலாவுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 • Share this:
  சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து கடந்த ஜனவரி 27-ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, கொரோனா சிகிச்சைக்குப் பின் பிப்ரவரி 9-ம் தேதி சென்னை திரும்பினார். சிறையிலிருந்து வெளியே வந்த அவர், தியாகராய நகரிலுள்ள அவரது இல்லத்தில் தங்கியிருந்தார். அப்போது, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் பாரதி ராஜாவுடன் இணைந்து சசிகலாவை அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்தார்.

  அப்போது, சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் அரசியலிலிருந்து விலகி இருப்பதாக அறிவித்தார். அதனையடுத்து, நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோல்வியடைந்த நிலையில் மீண்டும் அரசியலுக்கு வருவேன், அ.தி.மு.கவை மீட்பேன் என்று சசிகலா பேசிவருகிறார்.


  இந்தநிலையில், சசிகலாவுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதுதொடர்பாக சீமானின் ட்விட்டர் பதிவில், ‘மொழிப்போர் வீரர், தமிழ்த்தேசிய பற்றாளர், மறைந்த பெருமதிப்பிற்குரிய ஐயா முனைவர் நடராசன் அவர்களின் துணைவியாரும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு உறுதுணையாக விளங்கியவருமான மதிப்பிற்குரிய அம்மையார் சசிகலா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவிப்பதில் உளம் மகிழ்கிறேன்’என்று தெரிவித்தார்.
  Published by:Karthick S
  First published: