சீமான், பாரதிராஜா தலா 5 லட்சம் நிவாரண நிதி -கொரோனாவுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிக்க முதல்வரிடம் கோரிக்கை

மு.க.ஸ்டாலின், சீமான்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக பாரதி ராஜாவும், சீமானும் தலா 5 லட்ச ரூபாய் வழங்கினர்.

 • Share this:
  தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாவது அலை மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்ப்படுத்துவதற்கான கடந்த இரண்டு வார காலமாக தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பொதுமக்கள் கொரோனா நிவாரண நிதி வழங்கவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கைவைத்தார். அவருடைய கோரிக்கையை ஏற்று பல்வேறு தரப்பினரும் கொரோனா நிவாரண நிதி வழங்கிவருகின்றனர்.  இந்தநிலையில், சீமான் நிவாரண நிதி வழங்கினார்.

  நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ‘இன்று 04-06-2021, தலைமைச் செயலகத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, கொரோனா துயர்துடைப்பு பணிகளுக்காக, நாம் தமிழர் கட்சி சார்பாக 5 லட்சம் ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். இச்சந்திப்பின் போது உடனிருந்த இயக்குநர் பாரதிராஜாவும், அவர் சார்பில் 5 லட்ச ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இச்சந்திப்பின்போது 161வது, சட்டப்பிரிவின் படி அமைச்சரவையைக் கூட்டி ஏழு தமிழர்களின் விடுதலையைச் சாத்தியப்படுத்தவேண்டும் எனவும், கொரோனா தீவிர நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களுக்கும் தமிழ் சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப்படவேண்டும் எனவும், கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்படும் இணையவழி வகுப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை அரசே நிர்ணயம் செய்து ஒரு வரையறைக்குள் கொண்டுவரவேண்டும் எனவும், தேர்வுகளைவிட மாணவர்களின் உயிர் முக்கியம் என்பதைச் சுட்டிக்காட்டி, கொரோனா பரவல் குறையும்வரை 12 ஆம் வகுப்புக்கான தேர்வுகளை ஒத்திக்வைக்கவேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்தார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: