• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • CAA: புதுச்சேரியைப் போன்று தமிழக அரசும் துணிவோடு முடிவெடுக்குமா? சீமான்

CAA: புதுச்சேரியைப் போன்று தமிழக அரசும் துணிவோடு முடிவெடுக்குமா? சீமான்

சீமான்

சீமான்

  • Share this:
குடியுரிமை சட்டத்தை ஏற்கமாட்டோம் என்று புதுவை, மேற்குவங்க அரசுகள் துணிச்சலோடு முடிவு எடுத்தது போல், தமிழக அரசும் அந்த துணிவோடு முடிவெடுக்குமா என்பது தெரியவில்லை என சீமான் கூறியுள்ளார்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி இஸ்லாமிய மக்கள் தொடர்ந்து 3வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அவர்களுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அப்பகுதிக்கு வந்திருந்தார்.

அப்போது மேடையில் பேசிய சீமான் கூறுகையில், நாம் இப்போது அழிவு காலத்தில் இருக்கிறோம் என்றும், ஒரு தலைவன் தன் நாட்டை, மக்களை பற்றி சிந்திக்க தொடங்கினால் அவர்களுக்கு ஜாதி, மதம் பற்றி சிந்திக்க நேரம் இருக்காது. ஆனால் தற்போது மதம், ஜாதி என்பதை தூக்கிப்பிடித்து கொண்டிருக்கும் அரசை பார்க்கிறோம். இங்கு மதத்திற்கும், அரசிற்கும் வேறுபாடு இல்லை என்ற நிலை உள்ளது என்றார்.
மேலும் பல ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வரும் மக்களை குடியுரிமை இல்லை என்று கூறுவது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்றார்.

எனக்கு என் பாஸ்போர்டை கொடுங்கள் வேறு நாட்டுக்கு செல்கிறேன் என்ற நிலை தான் உள்ளது. ஜக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்தியர்கள் வசிக்கிறார்கள் அவர்களை அனுப்பினார்கள் என்றால் அவர்களுக்கான வேலையையும் இடத்தையும் கொடுபீர்களா?

குடியுரிமை திருத்த சட்டம் மனித குலத்திற்கு எதிரானது. இதை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம். இந்த சட்டத்தை திரும்பபெறும் வரை இதை நாம் கைவிட கூடாது.

எனவே நாம் ஒன்றிணைந்து போராடி நம்மை நாம் தற்காத்து கொள்ளவேண்டும். அமைதியாக போராடியவர்களை தடியடி நடத்தியதை ஏற்க முடியாது. ஒரு இடத்தில் போராட்டம் நடத்த விட்டிருந்தால் அமைதியாக முடிந்து இருக்கும். ஆனால் தேவையில்லாமல் தடியடி நடத்தி பல இடங்களில் போராட்டம் நடத்த வழிவகை செய்து விட்டனர். இந்நிலையில் நம் உரிமையை பெறும் வரை தொடர்ந்து போராடுவோம்.

இவ்வாறு சீமான் பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Yuvaraj V
First published: