நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சியிர் ஒருங்கிணைப்பாளராக சீமான் இருந்து வருகிறார். அவர், தமிழ் தேசிய அரசியலை முன்வைத்து தி.மு.க, அ.தி.மு.க மற்றும் தேசிய கட்சிகளுக்கு எதிராக அரசியலை முன்னெடுத்துவருகிறார்.
இந்தநிலையில், சென்னை வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சீமான் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான பரிசோதனைக்காகவே அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இன்று, இரவு வீடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.