கொசஸ்தலை ஆற்றில் உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்கப்படுவதை எதிர்த்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்
சீமான் தலைமையில் எண்ணூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எண்ணூரில் கொசஸ்தலை ஆற்றின் முடிவுப் பகுதியும் பக்கிங்காம் கால்வாயில் முடிவு பகுதியும் எண்ணூர் முகத்துவாரத்தில் கடலில் கலக்கிறது. இந்த முகத்துவாரத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்கள் நண்டு இறால்களை பிடிப்பார்கள். வட சென்னை அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேறும் சுடுநீர் இந்த ஆற்றில் விடப்படுகிறது. மேலும் உலர் சாம்பல்களும் இப்பகுதியில் காற்றில் விடப்படுகிறது. தற்போது ஆற்றின் குறுக்கே உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதற்காக சாலைகள் அமைக்கப்பட்டு கான்கிரீட்டுகள் போடப்பட்டு வருகிறது.
இதனால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் ஏற்கனவே சீமான் இப்பகுதியை ஆய்வு செய்து 31ஆம் தேதிக்குள் இதை அகற்றாவிட்டால் இங்கு ஆர்ப்பாட்டம் செய்வதாக கூறினார் அது அகற்றப்படாததால் இன்று எண்ணூரில் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின் சீமான் பத்திரிகையாளர்களை சந்தித்து கூறும்போது, செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பாரத பிரதமர் படம் போடாதது தவறுதான் என்றும் அவரை அழைக்காமல் நிகழ்ச்சி நடத்தி இருந்தால் தவறில்லை, ஆனால் பிரதமரை அழைத்துவிட்டு அவர் படம் போடாதது அவரை அவமதிக்கும் ஒரு செயல். நாட்டுக்கு நல்ல திட்டங்களை செய்வதை விட்டுவிட்டு 80 கோடியில் கடலில் பேனா வைப்பது என்பது நியாயமா என்று கேள்வி எழுப்பியவர், இது தொடருமேயானால் எம்ஜிஆருக்கு தொப்பி, கண்ணாடி, வைப்பார்கள்.. ஜெயலலிதாவுக்கு பெட்டகம் ஒன்றை வைப்பார்கள்.. அண்ணா அவர்களுக்கு மூக்குப்பொடி டப்பா ஒன்றையும் வைப்பார்கள் என்று நகைச்சுவையாக பேசினார்.
எண்ணூரில் ஆற்றை மறித்து சாலைகள் போடப்படுகிறது கான்கிரீட் தூண்கள் நிறுவப்படுகின்றன. இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் ஒரு புறம் சுடுதண்ணீர், மறுபுறம் உலர் சாம்பல் அலையாத்தி காடுகள் அழிக்கப்படுகின்றன. இதனால் நண்டு இறால்கள் இனப்பெருக்கம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டு அவைகள் மலடுகளாக மாறுகின்றன. இதனால் மீன்வளம் முற்றிலும் பாதிக்கப்படும். மீனவர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக இதையெல்லாம் அகற்றுவோம். அப்போது இத்தனை ஆயிரம் கோடி நஷ்டம் என அதிகாரிகள் சொல்லக்கூடாது, இப்போதே அதை அகற்றுங்கள். ஸ்ரீமதி விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை நடைபெறுவதாக கூறியுள்ளனர் எல்லாம் விசாரணைக்கும் தலைவர் நீங்கள் தானே பள்ளிகளில் நடப்பவற்றை மீடியாக்களுக்கு தெரிவிக்க கூடாது என கூறியுள்ளீர்கள். இன்னும் எத்தனை ஸ்ரீமதிகள் பாதிக்கப்பட வேண்டும் என எண்ணுகிறீர்களோ என்று கேள்வி எழுப்பினார்.
அன்றைய தினம் எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது கோ பேக் மோடி என்று கூறினீர்கள். ஆனால் தற்பொழுது அதே மோடியை அழைத்து அரசு முறை பயணம் என்கிறீர்கள். அனைத்தையும் ஆதாரத்துடன் பேசுவதாக அண்ணாமலை கூறுகிறார், ஆனால் இதுவரையில் ஜிஎஸ்டி மூலமாக சம்பாதித்த வருமானம் எவ்வளவு என்றும் அதனால் மக்களுக்கு செய்த நலத்திட்டங்கள் என்ன என்பதை கூற முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.
திருவொற்றியூர் செய்தியாளர் அசோக் குமார்உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.