”மரணமே தண்டனை என்றால் தான் ஒழுக்கம் வரும்; நாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் இதுதான் நடக்கும்” - சீமான்

”மரணமே தண்டனை என்றால் தான் ஒழுக்கம் வரும்; நாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் இதுதான் நடக்கும்” - சீமான்
சீமான்
  • News18
  • Last Updated: December 6, 2019, 3:23 PM IST
  • Share this:
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களை வன்புணர்வு செய்பவர்களை என்கவுண்ட்டர் செய்வோம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது நினைவு நாளையொட்டி அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் தெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொடூரமான முறையில் எரித்து கொன்றவர்களை என்கவுன்டர் செய்ததை வரவேற்பதாக தெரிவித்தார்

மேலும், பெண்களை போகப் பொருளாக நினைத்து வன்புணர்வு செய்பவர்களுக்கு மரணத்தை தவிர வேறு தண்டனை கிடையாது என்று கூறிய அவர்,


பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகளை குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்தது தவறு என்று குறிப்பிட்டார்.

எந்த இடத்தில் பாலியல் வன்புணர்வு செய்தார்களோ, அதே இடத்தில் வைத்து மக்கள் முன்னால் நான்கு பேரை சுட்டால் தான் அச்ச உணர்வு வருவதுடன், பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் மரணம்தான் தண்டனை என்றால் தான் ஒழுக்கம் வரும் என்று தெரிவித்தார்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் பாலியல் வண்புணர்வு செய்பவர்களை எண்கவுண்ட்டர் செய்வோம் என்றும் சீமான் கூறினார்.

First published: December 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்