Home /News /tamil-nadu /

75வது சுதந்தர தினக் கொண்டாட்டம் - தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு...ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

75வது சுதந்தர தினக் கொண்டாட்டம் - தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு...ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சுதந்திர தினம்

சுதந்திர தினம்

75th Independence Day: சென்னையைப் பொறுத்த வரை 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் உள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    இந்தியாவில் 75வது சுதந்தர தினக் கொண்டாட்டம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை 75வது சுதந்திர தினத்தை வெகு விமர்சையாக கொடியேற்றத்துடன் தமிழகத்தில் கொண்டாடப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப் பட்டுள்ளது. ஒரு லட்சத்திற்கும் மேலான காவல்துறையினர் தமிழகம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இந்த வருடம் 75வது சுதந்தர தினத்தை முன்னிட்டு அரசின் கோரிக்கையை ஏற்று ஹர் கர் திரங்கா பிரச்சாரம் படி நாடு முழுவதும் மக்கள் வீடுகளில் தேசிய கோடியை ஏற்றி வருகின்றனர். இந்த நிலையில் மத்திய உளவுத் துறையிலிருந்து சுதந்திர தினக் கொண்டாட்டத்தைச் சீர்குலைக்கும் வகையில் செயல்கள் நடக்க வாய்ப்புள்ளது என்று தகவல் விடுத்துள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் முக்கியமான பகுதிகளில் பாதுகாப்புப் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் நாளை கொடியேற்றத்துடன் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் பாதுகாப்புப் பணிகளைப் பலப்படுத்த கோரி டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து முன்னெச்சரிக்கையாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் வாகன சோதனை சூடுபிடித்துள்ளது. மேலும் முக்கிய இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், வணிக வளாகங்கள், மக்கள் அதிகம் கூடும் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    Also Read : செருப்பு வீச்சு சம்பவம்: 'திமுக அனுப்பிய அம்பு, எய்தவரிடமே திரும்பி வரும் படலம்' - நடிகை கஸ்தூரி ட்வீட்

    முக்கியமாக மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மற்றும் அந்த பகுதிகளைச் சுற்றி உள்ள இடங்களில் வெடிகுண்டு சோதனை நடத்தப்படுகிறது. 24 மணி நேரமும் நடத்தப்படும் இந்த சோதனை வரும் 16ம் தேதி வரை தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னையைப் பொறுத்த வரை 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். நாளை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேசிய கோடியை ஏற்ற உள்ள நிலையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 3 நாட்களாகவே போலீசார் தீவிரமான சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்கள் மற்றும் மெரினா கடற்கரையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வன்முறையைத் தூண்டுவது போல் பதிவுகளைப் பதிவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கவும்  உத்தரவிடப்பட்டுள்ளது.
    Published by:Janvi
    First published:

    Tags: Independence day, Security tightened, Tamil Nadu

    அடுத்த செய்தி