ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

''மெட்டல் டிடெக்டர் வேலை செய்யல.. பிரதமர் வந்தபோது பாதுகாப்பு குறைபாடு'' அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு

''மெட்டல் டிடெக்டர் வேலை செய்யல.. பிரதமர் வந்தபோது பாதுகாப்பு குறைபாடு'' அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு

அண்ணாமலை, கவர்னர் ரவி

அண்ணாமலை, கவர்னர் ரவி

ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்து சில சந்தேகங்களை மாநில அரசிடம் ஆளுநர் கேட்டுள்ளார், அது அவர் கடமை - அண்ணாமலை

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

ஆன்லைன் ரம்மி தடை மசோதா விவகாரத்தில், ஆளுநரின் மீது பழியை போட்டுவிட்டு தமிழ்நாடு அரசு தப்ப முடியாது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த அண்ணாமலை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்கு பிரதமர் மோடி வருகை தந்த போது பாதுகாப்பு குறைபாடு இருந்ததாகவும், தமிழ்நாடு காவல்துறை பயன்படுத்தும் பாதுகாப்பு உபகரணங்களின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, மத்திய அரசின் வீடு தோறும் குடிநீர் திட்டத்தில் மாநில அரசு முறைகேடு செய்திருப்பதாகவும், அதை ஆதாரத்துடன் ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் கூறினார். ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்து சில சந்தேகங்களை மாநில அரசிடம் ஆளுநர் கேட்டுள்ளதாகவும், சரியான சட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பதே ஆளுநரின் பணி என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்காக பிரதமர் சென்னை வந்த போது, காவல்துறையின் மெட்டல் டிடெக்டர்கள் வேலை செய்யவில்லை என்றும், பிரதமரின் வருகையின் போது பாதுகாப்பு குறைபாடுடன் செயல்பட்ட மாநில அரசால், சாமானிய மக்களுக்கு எப்படி பாதுகாப்பு வழங்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.

First published:

Tags: Annamalai, PM Modi, RN Ravi