அடிப்படைவாத அமைப்புகளால் அச்சுறுத்தல் - முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

அடிப்படைவாத அமைப்பினரால் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததன் அடிப்படையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பை காவல்துறையினர் அதிகப்படுத்தியுள்ளனர்.

அடிப்படைவாத அமைப்புகளால் அச்சுறுத்தல் - முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
எடப்பாடி பழனிசாமி
  • News18 Tamil
  • Last Updated: September 28, 2020, 1:57 PM IST
  • Share this:
தமிழக காவல்துறைக்கு உளவுத்துறை மூலம் நேற்று கிடைத்த தகவல் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள மிக முக்கிய பிரமுகர்களுக்கு அடிப்படைவாத அமைப்பு மற்றும் மற்றும் சமூக விரோத அமைப்புகள் மூலம் அச்சுறுத்தல் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதன்அடிப்படையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். தமிழக முதல்வருக்கு z பிளஸ் பாதுகாப்பு, சிஐடி பிரிவு மற்றும் சென்னை காவல்துறை ஆகியவற்றின் மூலம் வீடு, அலுவலகம் மற்றும் கான்வாய்களில் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் 24 மணி நேரம் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். குறிப்பாக நிலவும் சட்ட ஒழுங்கு நிலைமையை அடிப்படையாக வைத்து, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ள அச்சுறுத்தலை தடுக்கும் விதமாக தீவிர பாதுகாப்பும், கண்காணிப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற இருக்கிற காரணத்தினால், அதில் மூத்த தலைவர்கள் இடையே அடுத்த முதலமைச்சர் யார் என்ற சர்ச்சை இருப்பதும் தமிழக முதலமைச்சரின் பாதுகாப்பை அதிகரிக்க காரணமாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். எனவே தமிழக முதலமைச்சர் செல்லும் இடத்திற்கெல்லாம் அவருக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட வேண்டும் என உளவுத் துறை எச்சரித்துள்ளது.


ஏற்கனவே தீவிரவாத கும்பல்களால் இந்து முன்னணி தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கிடைத்த உளவுத்துறை தகவல் அடிப்படையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளையும் உஷார்படுத்தி தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக இஸ்ரேல் தீவிரவாத அமைப்புகளால் ஆபத்து உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
First published: September 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading