விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்... பட்டாசு மற்றும் வெடிபொருள் கடைகளை மூட உத்தரவு

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்... பட்டாசு மற்றும் வெடிபொருள் கடைகளை மூட உத்தரவு
வாக்குப்பதிவு.
  • News18
  • Last Updated: October 20, 2019, 8:42 AM IST
  • Share this:
தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு இரு தொகுதிகளிலும் தலா 2,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொகுதியில் இருந்து வெளிநபர்கள் வெளியறிய நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் உள்பட 17 மாநிலங்களில் உள்ள 49 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் திங்கள்கிழமை நடைபெற உள்ளது. பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்த நிலையில், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள காவல் துறையினர், பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில், நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்த நெல்லை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான ஷில்பா பிரபாகர் சதிஷ், 95 சதவீத வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு மைய நுழைவுச்சீட்டு விநியோகம் செய்யும் பணி நிறைவடைந்ததாகவும் தொகுதியில் உள்ள 299 வாக்குச்சாவடிகளிலும் கேமரா பொருத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக அக்டோபர் 20 முதல் 25 வரை பட்டாசு மற்றும் வெடிபொருள் கடைகளை மூடிவைக்கவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் வாக்குப்பதிவு மையம் அருகே வாக்காளர்களை தூண்டும்விதமாக சைகை காட்டக்கூடாது என்றும் செல்போன் எடுத்துச் செல்லக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம் என விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும் இணையதள கேமரா மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.விக்கிரவாண்டியில் திமுக-வுக்கும் அதிமுக-வுக்கும் நேரடிப் போட்டி நாங்குநேரியில் அதிமுக-வுக்கும், காங்கிரசுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இதுபோல் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் என்.ஆர். காங்கிரசுக்கும், காங்கிரசுக்கும் இடையே நேரடி போட்டி காணப்படுகிறது. வாக்குகள் வரும் 24 தேதி எண்ணுப்படவுள்ளன.

Also watch

First published: October 20, 2019, 8:42 AM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading